இளம் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்: கர்நாடக அமைச்சர் மீது போலீஸில் புகார்

கர்நாடக அமைச்சர் ரமேஷ்.

ஊடகங்கள் அமைச்சர் ரமேஷ் ஜார் சிஹோளியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது.

 • Share this:
  இளம் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி இளம் பெண்ணுடன் பல முறை உடலுறவு வைத்துக் கொண்டதாக கர்நாடகா பாஜக அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜார் சிஹோளி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது.

  அமைச்சர் ரமேஷ் ஜார் சிஹோளிக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.

  இது தொடர்பான வீடியோ, சிடிக்கள் அடங்கிய ஆதாரத்துடன் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  கர்நாடகாவில் குமாரசாமி தலைமை காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் எடியூரப்பா தலைமை பாஜக ஆட்சி அமைய முக்கியக் காரணம் ரமேஷ் ஜார் சிஹோளிதான் என்று கூறப்படுகிறது.

  இளம் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவருக்கு ஆசை காட்டி பலமுறை அவருடன் உடலுறவு கொண்டதாக ரமேஷ் ஜார் சிஹோளி உறவு வைத்துக் கொண்டதாக கன்னட டிவி சேனல்கள் நேற்று பரபரப்பு செய்தி வெளியிட்டது.

  இது தொடர்பாக கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்கத் தலைவர் தினேஷ் கல்லஹள்ளி, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் வீடியோ அடங்கிய சிடி ஆதாரத்துடன் கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  சிடியில் மெத்தை மீது அமைச்சரும் பெண்ணும் நெருக்கமாக இருக்கும் வீடியோ படங்கள், மொபைல் போனில் இருவரும் பேசிக்கொண்டதாகக் கூறப்படும் ஆடியோ பேச்சும் உள்ளது.

  இந்த ஆதாரங்களின் உண்மைத்தரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கட்சி சகாக்களுடன் சந்திப்பைக் கூட்டினார். இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் விசாரித்த பிறகு அவரை ராஜினாமா செய்யச் சொல்லலாம் என்று கூறப்படுகிறது.

  ஊடகங்கள் அமைச்சர் ரமேஷ் ஜார் சிஹோளியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது.

  ஜார் சிஹோலி கர்நாடகா பெல்காவி பகுதியிலிருந்து வந்துள்ள ஒரு செல்வாக்கு மிக்க பிரமுகர் இவரும் காங்கிரஸின் டி.கே.சிவக்குமாரும் ஒரு காலத்தில் நெருங்கிய தோழர்கள்.

  பெல்காவி லோக்சபா இடத்துக்கான இடைத்தேர்தல் வரவிருக்கிறது, இந்த நிலையில் இவர் மீது இத்தகைய புகார் எழுந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.  இந்தத் தொகுதி எம்.பி. சுரேஷ் அங்காடி கோவிட் காய்ச்சலில் இறந்ததால் இந்தத் தொகுதி காலியாக உள்ளது
  Published by:Muthukumar
  First published: