Home /News /national /

கிடுகிடுவென உயரும் கொரோனா: நாட்டில் மீண்டும் பத்தாயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு!

கிடுகிடுவென உயரும் கொரோனா: நாட்டில் மீண்டும் பத்தாயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு!

Covid-19 | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,17,979 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India
    டெல்லி : கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 10,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சில தினங்களுக்கு முன் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் 10 ஆயிரத்திற்கு மேல் நோய் பாதிப்பு பதிவாகி உள்ளது. பாதிப்பு பொறுத்தவரை நேற்று முன்தினம் 9531 பேருக்கு தொற்று பதிவானது. அதுமட்டுமின்றி, புதிதாக 8586 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10649 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,43,68,195ஆக அதிகரித்துள்ளது.அதேபோல, கொரோனா பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,452ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 677 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,44,301ஆக உயர்ந்துள்ளது.

    Also Read : சோனாலி போகத் மரணம்: போதை மருந்து கொடுத்து கற்பழித்துக் கொலை என சகோதரர் போலீசில் பரபரப்பு புகார்...

    மேலும், கொரோனா தொற்றுக்கு தற்போது 96442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,17,979 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 2,10,58,83,682 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 88,35,23,886 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
    Published by:Archana R
    First published:

    Tags: Covid-19, India

    அடுத்த செய்தி