• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரஃபேல் விவகாரத்தில் புதிய திருப்பம்: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

ரஃபேல் விவகாரத்தில் புதிய திருப்பம்: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

ரஃபேல் ஒப்பந்தம்

ரஃபேல் ஒப்பந்தம்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே லஞ்சப் பணம் கைமாறியதாக செய்தி வெளியானதையடுத்து, அக்கட்சி மீது பாஜக விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளது.

  • Share this:
    ரஃபேல் போர் விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் பணம்  கைமாறியதற்கான ஆதாரத்தை பிரான்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது .

    பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை வாங்க இந்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது. 59 ஆயிரம் கோடி ரூபாயில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் அடிப்படையில் இதுவரை 2 6 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்துள்ளன. இந்நிலையில், மிக அதிக விலைக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புலனாய்வு இணைய ஊடகமான மீடியாபார்ட் ( mediapart) ரஃபேல் ஒப்பந்தத்தைப் பெற இந்தியாவை சேர்ந்த இடைத்தரகருக்கு டசால்ட் நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக  செய்தியை வெளியிட்டது. இதையடுத்து, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக புதிய செய்தியை மீடியாபார்ட் வெளியிட்டுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தை பெறுவதற்காக இடைத்தரகராகச் செயல்பட்ட சுஷேன் குப்தாவுக்கு 60 கோடி ரூபாய் வரை லஞ்சம் தரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   மேலும் 2007-2012 ம் ஆண்டுகளிலேயே  லஞ்ச பணம் கைமாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக இந்திய புலனாய்வு ஆணையங்கள் சரியாக விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இந்தி தெரியாது... எங்கள் மொழி தெரிந்த தலைமை செயலாளர்தான் வேணும்: மிசோரம் முதல்வர்


    காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே லஞ்சப் பணம் கைமாறியதாக செய்தி வெளியானதையடுத்து, அக்கட்சி மீது பாஜக விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளது. பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, “ காங்கிரஸ் என்றால் எனக்கு கமிஷன் வேண்டும் (INC- I Need Commission) என்று அர்த்தம்  . சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, ராபர்ட் வத்ரா என எல்லாரும் 'எனக்கு கமிஷன் வேண்டும் என்று கூறுகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.

    மேலும் படிக்க: லக்கிம்பூர் வன்முறை: நாங்கள் எதிர்பார்த்த பாதையில் வழக்கு செல்லவில்லை... உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: