இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள், இங்கிருந்தே பிரான்ஸ் நாட்டில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அந்நாடு வழங்குகிறது. அந்த வகையில் கடந்த எப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 24ஆம் தேதிகளில் நடந்த பிரான்ஸ் நாட்டின் குடியரசுத் தலைவருக்கான தேர்தல்களில் இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் இருகிருந்தே வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது பிரான்ஸ் அரசு தனது குடிமக்களுக்கு தங்கள் பிரதிநிதியை நியமிக்க ஜனநாயக ரீதியாக வாக்களிக்க வாய்ப்பு வழங்குகிறது.
இந்த தேர்தலில் பெரும்பான்மை வயதை எட்டிய, தூதரக தேர்தல் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட பிரெஞ்சு குடிமக்களுக்கு, அவர்கள் வசிக்கும் நாட்டிலேயே வாக்களிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 4,463 பிரெஞ்சு குடிமக்கள், இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள், தங்களது வாக்கினை வாக்குப்பெட்டியில் நேரடியாகவோ, ப்ராக்ஸி மூலமாகவோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது இணைய வழி மூலமாகவோ வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் சுற்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஜூன் 19ஆம் தேதி இரண்டாவது சுற்று வாக்களிக்க அழைக்கப்படுவார்கள். இந்தத் தேர்தலுக்காக புதுச்சேரியில் இரண்டு மையங்களும், சென்னை மற்றும் காரைக்காலில் தலா ஒரு மையங்கள் என 4 இடங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து, 6 தனித்தனி வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சதுப்புநில காட்டில் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள்..! புதுச்சேரி மாணவர்கள் அகற்றம்
இந்த சட்டப் பேரவைத் தேர்தல் பிரதிநிதிக்காக, இந்தாண்டு முதல் சுற்றில் 8 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர். புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணைத்தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள பியூரோ டி பிரான்ஸ் ஆகிய நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன், வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட, பிரெஞ்சு குடிமக்களுக்கான தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: France, French govt, India and France