முகப்பு /செய்தி /இந்தியா / சுதந்திர போராட்டத்தின்போது ரகசிய வானொலி நடத்திய கல்லூரி மாணவி... யார் இந்த உஷா மேத்தா

சுதந்திர போராட்டத்தின்போது ரகசிய வானொலி நடத்திய கல்லூரி மாணவி... யார் இந்த உஷா மேத்தா

சிறு குழந்தையாக இருந்தபோது, ​​மதுக்கடைகள் முன் போராட்டம் நடத்தி, பல்வேறு பிரசுரங்களை ரகசியமாக விநியோகம் செய்தார், சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு தூதுபோனார்.

சிறு குழந்தையாக இருந்தபோது, ​​மதுக்கடைகள் முன் போராட்டம் நடத்தி, பல்வேறு பிரசுரங்களை ரகசியமாக விநியோகம் செய்தார், சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு தூதுபோனார்.

சிறு குழந்தையாக இருந்தபோது, ​​மதுக்கடைகள் முன் போராட்டம் நடத்தி, பல்வேறு பிரசுரங்களை ரகசியமாக விநியோகம் செய்தார், சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு தூதுபோனார்.

  • Last Updated :

“இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியிலிருந்து  42.34 பண்பலை காங்கிரஸ் வானொலியில் இருந்து வரும் அழைப்பு”, இந்த வரிகள் டாக்டர் உஷா மேத்தாவால் 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சொல்லப்பட்டது.

டாக்டர் உஷா மேத்தா ஒரு காந்தியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார், சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசியவாத உணர்வைப் பரப்புவதற்காக ஒரு இரகசிய வானொலி நிலையமான காங்கிரஸ் வானொலியை நடத்தி வந்தவர்.

1920 மார்ச் 25ஆம் தேதி பிறந்த உஷா மேத்தா, குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள சரஸ் கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தீவிர பங்கேற்பாளராக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1928 ஆம் ஆண்டில், தனது எட்டு வயதில், சைமன் கமிஷனுக்கு எதிரான தனது முதல் போராட்டத்தில் பங்கேற்றார்.

இந்தியாவிற்கு சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15 தேர்வு செய்ய என்ன காரணம் தெரியுமா?

உப்பு சத்தியாகிரகத்தின் போது கடல் நீரை தனது வீட்டிற்கு கொண்டு வந்து அதிலிருந்து உப்பை உற்பத்தி செய்ததாக அவர் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார். டாக்டர் உஷாவின் தந்தை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நீதிபதியாக இருந்ததால், அத்தகைய இயக்கங்களில் அவர் பங்கேற்பதை கடுமையாக விமர்சித்தார். இருப்பினும், 1930 இல் அவர் ஓய்வு பெற்ற பிறகு, மகள்  விரும்பியபடி செய்ய அனுமதித்தார்.

சிறு குழந்தையாக இருந்தபோது, ​​மதுக்கடைகள் முன் போராட்டம் நடத்தி, பல்வேறு பிரசுரங்களை ரகசியமாக விநியோகம் செய்தார், சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு தூதுபோனார். 1939 ஆம் ஆண்டில், உஷா மேத்தா பம்பாயில் உள்ள வில்சன் கல்லூரியில் தத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்து, சட்டப் படிப்புக்கு தயாராகத் தொடங்கினார். இருப்பினும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினால் தனது படிப்பை நிறுத்திவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தார்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, டாக்டர் உஷா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து "காங்கிரஸ் வானொலி"யின் முதல் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அவர் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் செய்தித் தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியை “ஹிந்துஸ்தான் ஹமாரா” பாடலுடன் தொடங்கி, “வந்தே மாதரம்” என்று முடித்தனர். ஆங்கிலேயர்களின் அச்சுறுத்தல்களையும் மீறி அவர்களது செயலை விமர்சித்துப் பேசினார்.

1942 இல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) அமர்வில், டாக்டர் உஷா மேத்தா மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மௌலானா ஆசாத் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் ஆற்றிய உரைகளால் தூண்டப்பட்டு ஒரு ரகசிய வானொலி நிலையத்தை நிறுவி, உலகின் தொலைதூர இடங்களுக்கு செய்திகளை வழங்கவும் உத்வேகம் கொண்டார்.

ஆங்கிலேயர் பார்வையில் இருந்து தப்பிக்க அடிக்கடி இடம் மாறினர்.. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் காலத்தில், அவர்கள் 7-8 நிலையங்கள் மாறினர். நவம்பர் 12, 1942 அன்று, அவர்கள் கிர்கானில் இருந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தியபோது, ​​உஷா மேத்தாவை அவரது கூட்டாளிகளுடன் போலீசார் கைது செய்தனர். ஐந்து வாரங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 1946 இல் விடுவிக்கப்பட்டார், பம்பாயில் விடுவிக்கப்பட்ட முதல் அரசியல் கைதி அவர் தான்.

"செய் அல்லது செத்து மடி" என்ற காந்தியக் கொள்கையைத் தலையாய்க் கொண்டார். பின்னர் அவர் பம்பாய் பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனையில் முனைவர் பட்டம் பெற்றார். 1998 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தின் பத்ம விபூஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 11, 2000 அன்று, டாக்டர் உஷா மேத்தா தனது 80வது வயதில்  காலமானார்..

First published:

Tags: Independence day