நாடு முழுவதும் இலவச தடுப்பூசி முகாம்... பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை

மாதிரிப் படம்

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 • Share this:
  கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் இலவச தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுதொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  சிவசேனா தலைவரும், மகாராஷ்ட்ரா முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

  அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்தவர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், அதற்காக ஒதுக்கீடு செய்துள்ள நிதியை ஆக்சிஜன், தடுப்பூசி வாங்க மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
  Published by:Vijay R
  First published: