ஹோம் /நியூஸ் /இந்தியா /

இலவச ஆன்லைன் டிக்கெட் எங்கு கிடைக்கும்? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

இலவச ஆன்லைன் டிக்கெட் எங்கு கிடைக்கும்? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி கோவில்

திருப்பதி கோவில்

இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு நாளை மறுநாள் முதல், தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupati, India

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய டோக்கன்கள் வழங்குவதை பற்றி தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

  இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு நாளை மறுநாள் முதல், தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

  திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம் ஆகிய இடங்களில் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் 25 ஆயிரம் டோக்கன்களும், இதர நாட்களில் 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

  Read More : கந்தசஷ்டி 2022 : விரதம் இருக்கும் முறை மற்றும் பலன்கள் என்னென்ன?

  மேலும், சோதனை அடிப்படையில் விஐபி தரிசன நேரத்தை வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் காலை 8 மணியாக மாற்றவும் அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Online, Tirupathi