• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இலவச காஸ் சிலிண்டர், பேருந்தில் இலவச பயணம்.. வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்!

இலவச காஸ் சிலிண்டர், பேருந்தில் இலவச பயணம்.. வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்!

உ.பி. தேர்தல்

உ.பி. தேர்தல்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஆண்டுதோறும் பெண்களுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், மேலும் மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

  • Share this:
    உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு அளித்துள்ளார். இலவச எல்பிஜி சிலிண்டர், பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் போன்றவையும் இதில் அடக்கம்.

    உத்தர பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. 430 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு பல முனை போட்டி நிலவிவருகிறது. ஆளும் பாஜக கூட்டணி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி போன்றவை தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

    உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜக முனைப்புகாட்டி வரும் நிலையில்,எப்பாடியாவது ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த முறை பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலை காங்கிரஸ் சந்திக்கவுள்ளது. தேர்தலில் 40 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கவுள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதேபோல்,  விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், கோதுமை , நேல் ஆகியவை குவிண்டால் ரூ.2,500க்கு பெறப்படும் போன்ற வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார்.

    இந்நிலையில், பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன், ஆண்டுதோறும் பெண்களுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், மேலும் மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் படிக்க: மொழிவாரி மாநிலங்கள் பிறந்த தினம்: ஆந்திரா, கேரளா, கர்நாடகா உற்சாக கொண்டாட்டம்!


    கடந்த மாதம், 12ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் கல்லூரி படிப்பை முடிந்த பெண்களுக்கு இ.ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி அறிவித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: