பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொடுத்தால் உணவு இலவசம்.. சத்தீஸ்கரில் அறிமுகம்..!

கார்பேஜ் கஃபே

”இதனால் இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நகரம் தூய்மையாகும். இரண்டாவது சிறந்த உணவு கிடைக்கும். பட்டினியில்லா இந்தியாவையும் உருவாக்க முடியும்”

 • News18
 • Last Updated :
 • Share this:
  சத்தீஸ்கரில் கார்பேஜ் கஃபே என்ற உணவுக் கடை திறக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அம்சமாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துக் கொடுத்தால் உணவு இலவசம் என்று அறிவித்துள்ளது.

  சத்தீஸ்கரின் சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ் சிங் டியோ அம்பிகாபூரில் இந்த கடையைத் திறந்து வைத்துள்ளார். இந்தியாவின் இரண்டாவது தூய்மையான நகரம் என்ற பெருமையைக் கொண்ட அம்பிகாபூருக்கு இது மற்றுமொரு பெருமையாக அமைந்துள்ளது. இதனால் மோடியின் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தை நிறைவேற்றவே இந்த கடை திறக்கப்பட்டுள்ளதாகவும் அதன் நிறுவனர் கூறியுள்ளார்.

  ”இந்த தனித்துவமான சிந்தனையை நான் துவக்கி வைத்ததில் மிகவும் பெருமைக் கொள்கிறேன். ஒட்டுமொத்த இந்தியாவும் காந்தியின் 150வது பிறந்த நாளில் சிறு பிளாஸ்டிக்கைக் கூட பயன்படுத்த மாட்டோம் என மும்மொழிந்தது. அதை நிறைவேற்றும் விதமாக அம்பிகாபூரில் திறந்துள்ள இந்த கார்பேஜ் கஃபே சிறந்த முன்னுதாரணம் “ சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ் சிங் டியோ கூறியுள்ளார்.  இந்த கஃபே பற்றிய சிறப்பு பற்றி தெரிந்து கொண்டதும் என் வீட்டில் பிளாஸ்டிக் கழிவுகளையும் சேகரிக்கத் தொடங்கிவிட்டேன். குடிமகன்களுக்கு இது சிறந்த விழிப்புணர்வு. இதனால் இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நகரம் தூய்மையாகும். இரண்டாவது சிறந்த உணவு கிடைக்கும். பட்டினியில்லா இந்தியாவையும் உருவாக்க முடியும் என்று அம்பிகாபூர்வாசி ஒருவர் கூறியுள்ளார்.

  பார்க்க :

  காடை வளர்ப்பில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்…! எப்படி?

  Published by:Sivaranjani E
  First published: