Home /News /national /

பிரான்சிலிருந்து 36 ரஃபேல்களும் இந்தியா வந்தடைந்தது- பிரான்ஸ் தூதர் தகவல்..

பிரான்சிலிருந்து 36 ரஃபேல்களும் இந்தியா வந்தடைந்தது- பிரான்ஸ் தூதர் தகவல்..

ரஃபேல்

ரஃபேல்

Rafale jets: ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் பாதுகாப்பு, உலகத்தில் அந்த நாட்டின் நிலை என்பது அந்த நாட்டின் ஆயுதம், பாதுகாப்பு, ராணுவ தளவாடங்கள் இருப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் பாதுகாப்பு, உலகத்தில் அந்த நாட்டின் நிலை என்பது அந்த நாட்டின் ஆயுதம், பாதுகாப்பு, ராணுவ தளவாடங்கள் இருப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது.

இந்தியா தனது ராணுவ தளவாடங்களை தானே தயாரிப்பதோடு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து அதிகம் இறக்குமதி செய்கிறது. விமானப்படை மற்றும் கடற்படைக்கான விமானங்கள் பிரான்ஸிடம் இருந்து வாங்கப்படுகிறது.

ஏப்ரல் 2015 இல் பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியமான செயல்பாட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் திட்டத்தின் படி, 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தமிடப்பட்டன. இந்தியாவும் பிரான்சும் 2016 செப்டம்பரில் 7.87 பில்லியன் யூரோ மதிப்புள்ள, அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தில் (IGA) கையெழுத்திட்டன. அதைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு வந்தன.

காஷ்மீரி பேப்பர் மாச்சே கலையை அழிவில் இருந்து மீட்டெடுக்கும் பெண்

கடந்த ஜூலை 14 அன்று பிரான்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது. புதுதில்லியில் நடைபெற்ற பிரெஞ்சு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய புதுதில்லியில் உள்ள பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன், ஒப்பந்தத்தின்படி புதுதில்லிக்கு 36 போர் விமானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

COVID-19 தொற்றுநோய் காரணமாக உலகளாவிய லாக்டவுன் இருந்தபோதிலும், பிரான்ஸ் ராணுவ தளவாட நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் அனைத்து போர் விமானங்களையும் நேரத்திற்கு முன்பே வழங்கியுள்ளது என்று பெருமிதம் கொண்டார்.

மொத்தம் உள்ள 36 போர் விமானங்களில் 35 இந்தியாவிற்கு வந்துள்ளன. ஒரு ரஃபேல் போர் விமானம், 13 இந்தியா குறிப்பிட்ட மேம்பாடுகள் (ISE) சோதனை செய்யப்படும் கருவி கொண்ட விமானங்கள், இன்னும் பிரான்சில் இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட விமானங்கள் ரஃபேல் மற்றும் RB008 என பெயரிடப்பட்டது. RB என்பது IAF இன் துணைத் தலைவர், மற்றும் முன்னாள் இந்திய விமானப்படை (IAF) தலைமை ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ். பதவுரியா அவர்களது பெயர் கொண்டுள்ளது. அவர் தான் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவை வழிநடத்தி, ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றினார்.



மூன்று ரஃபேல் ஜெட் விமானங்களின் கடைசித் தொகுதி பிப்ரவரியில் இந்தியாவிற்கு வந்துள்ளன. இதன் மூலம் இந்திய விமானப்படையின் மொத்த ரஃபேல்களின் இருப்பு 35 ஆக மாறியுள்ளது. சேவையில் உள்ள அனைத்து ரஃபேல் ஜெட் விமானங்களும் ஏற்கனவே இந்திய தரநிலை சான்றிதழ் பெற்றுள்ளன.

கடற்படைக்கு ஏற்ற மாறுபாடு கொண்ட பிரெஞ்சு போர் விமானமான, ரஃபேல்-எம், அமெரிக்காவின் போயிங் எஃப்-18 சூப்பர் ஹார்னெட் விமானமும், இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து இயக்குவதற்கான ஜெட் விமானங்களுக்கான டெண்டருக்கான போட்டியில் உள்ளது. ஜனவரியில், ரஃபேல்-எம் கோவாவில் உள்ள கடற்படையின் கடற்கரை அடிப்படையிலான சோதனை மையத்தில் இருந்து சோதிக்கப்பட்டது. அதே நேரத்தில் F-18 மே மாதத்தில் தன் சோதனையை முடித்தது.

செயல்பாட்டு டெமோ பற்றிய அறிக்கை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கடற்படை ஊழியர்களின் மதிப்பீட்டை மேற்கொள்ளும். இந்த ஒப்பந்தத்தை முடிக்க அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை (ஐஜிஏ) பரிந்துரைப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: French govt, India and France, Rafale deal, Rafale fighter jet, Rafeal Deal Modi

அடுத்த செய்தி