• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வேண்டுமென்றே செருப்பு அணிந்து கோவிலுக்குள் நுழைந்து வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!

வேண்டுமென்றே செருப்பு அணிந்து கோவிலுக்குள் நுழைந்து வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!

Clip - Viral Video

Clip - Viral Video

புகழ்பெற்ற மலைக் கோவிலுக்குள் நான்கு இளைஞர்கள் காலில் செருப்பு அணிந்தபடி நுழைந்து, அதனை வீடியோவாக எடுத்து கடந்த அக்டோபர் 7ம் தேதியன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர்.

  • Share this:
வேண்டுமென்றே செருப்பு அணிந்து கொண்டு கோவிலுக்குள் நுழைந்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய 4 இளைஞர்கள் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆன்மீக திருத்தலங்களுக்குள் நுழையும் போது செருப்பு அணியக் கூடாது என்பது வகுக்கப்படாத விதி. கோவில்களுக்கு வெளியே செருப்புகளை போட்டுவிட்டு செல்லலாம் அல்லது அதனை பாதுகாக்கவே விஷேச ஏற்பாடுகளும் தனியாக செய்யப்பட்டுள்ளன. நிலைமை இப்படியிருக்கும் போது சில இளைஞர்கள் கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்று அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத உணர்வுகளை காயப்படுத்தி வீடியோ:

கர்நாடகா மாநிலம் தக்‌ஷின கன்னட மாவட்டத்தின் பந்த்வால் எனும் பகுதியில் உள்ள கரிஞ்சா மலை மீது உள்ளது கரிஞ்சேஸ்வரர் கோவில். இந்த புகழ்பெற்ற மலைக் கோவிலுக்குள் கடந்த அக்டோபர் மாதம் நான்கு இளைஞர்கள் காலில் செருப்பு அணிந்தபடி நுழைந்து, அதனை வீடியோவாக எடுத்து கடந்த அக்டோபர் 7ம் தேதியன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர்.

Also read: கணவருடன் பிரச்னை என போலீஸ் நிலையம் சென்ற பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்த இன்ஸ்பெக்டர்!

இந்த வீடியோ வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இச்சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து இயக்கங்கள் போராட்டத்தில் குதித்தன. இந்து ஜகரான் வேதிகே என்ற அமைப்பினர், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் வேண்டுமென்றே கோவில் புனிதத்தை கெடுக்கும் நோக்கில் செயல்பட்டிருப்பதாக தனது கண்டனத்தை பதிவு செய்தது.

இதனிடையே, மத உணர்வுகளை காயப்படுத்திய அந்த இளைஞர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ ராஜேஷ் நாயக் காவல்துறைக்கு கோரிக்கை வைத்தார்.

Also read: பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு அமேசான் அனுப்பிய நிஜ பாஸ்போர்ட்.. இதெப்படி சாத்தியம்?

இளைஞர்கள் கைது:

இந்நிலையில், கோவிலுக்குள் செருப்பு போட்டபடி நுழைந்து வீடியோ வெளியிட்டதாக மங்களூரை அடுத்த உல்லல் பகுதியைச் சேர்ந்த புஷெர் ரஹ்மான் (வயது 20), இஸ்மாயில் அர்ஹமாஸ் (வயது 22),முகமது தானிஷ் (வயது 19) மற்றும் முகமது ரஷாத் (வயது 19) ஆகிய நான்கு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் பகவான் சோனாவானே தெரிவித்துள்ளார்.

கோவில் நிர்வாகத்தினர் தரப்பில் கடந்த நவம்பர் 3ம் தேதி அளித்த புகாரைத் தொடர்ந்து கோவில் புனிதத்தை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், மத உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்தியதாகவும் புன்னலக்கட்டே போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: