ஒரே நாளில் பாஜகவில் இணைந்த 4 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்! - கடும் அதிர்ச்சியில் மமதா பானர்ஜி!

ஒரே நாளில் பாஜகவில் இணைந்த 4 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்! - கடும் அதிர்ச்சியில் மமதா பானர்ஜி!

பாஜக

இவர்கள் தவிர்த்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ள 28 சிட்டிங் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், பலம் வாய்ந்த தலைவர்கள் பாஜகவில் இணைவதற்காக பேசி வருவதாக கூறப்படுகிறது.

  • Share this:
மேற்குவங்கத்தில் அதிரடியாய் ஒரே நாளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கியதில் இருந்து இப்படி ஒரு நெருக்கடியை சந்தித்திராத அளவுக்கு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக தரப்பிலிருந்து கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார் மமதா பானர்ஜி. கடந்த சில மாதங்களாகவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். நேற்று பிரதமர் மோடி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் எம்.பியும், பிரபல பாலிவுட் நடிகருமான மிதுன் சக்கரபோர்த்தி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் அதில் தங்களின் பெயர் இடம்பெறாத அதிருப்தியில் இன்று ஒரே நாளில் 4 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிலும் பெண் வேட்பாளர் ஒருவரும் பாஜகவில் இணைந்திருப்பது கடும் அதிர்ச்சியை மமதா தரப்புக்கு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

சிங்கூர் தொகுதியின் 3 முறை எம்.எல்.ஏவான ரபீந்திரநாத் பட்டாச்சார்யா, மால்டாவின் ஹபிப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சரளா முர்மு, South 24 Parganas மாவட்டத்தில் உள்ள Satgachia தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏவாக இருந்த சோனாலி குஹா (இவர் மமதா பானர்ஜிக்கு மிக நெருகமானவராக அறியப்படுகிறார்), North 24 Parganas மாவட்டத்தில் உள்ள Basirhat Dakshin தொகுதியின் எம்.எல்.ஏவான தீபேந்து பிஸ்வாஸ் (முன்னாள் கால்பந்தாட்ட நட்சத்திரம்), Shibpur தொகுதியின் எம்.எல்.ஏவான ஹத்து லஹிரி ஆகியோர் இன்று ஒரே நாளில் பாஜகவில் இணைந்தனர். இவர்களுடன் பிரபல பெங்காலி நடிகையான தனுஸ்ரீ சக்கரபோர்த்தியும் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

மேற்குவங்கத்தின் பாஜக தலைவர் திலீப் கோஷ், தேசிய துணைத் தலைவர் முகுல் ராய், சுவேந்து அதிகாரி, லாக்கெட் சாட்டர்ஜி ஆகியோர் புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றனர்.

இன்று பாஜகவில் இணைந்தவர்களில் சோனாலி குஹா மமதாவுக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். இவர் மேற்குவங்க சட்டமன்ற சபாநாயகராக பதவி வகித்தவர். முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் சொந்த தொகுதியான Satgachia-வில் சிபிஎம் கட்சியின் கோகுல் பைரகியை வீழ்த்தியதால் பிரபலமாக திகழ்ந்தார். ஜோதிபாசு Satgachia தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏவாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர்த்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் உள்ள 28 சிட்டிங் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், பலம் வாய்ந்த தலைவர்கள் பாஜகவில் இணைவதற்காக பேசி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மேற்குவங்கத்தில் வரும் நாட்களிலும் தலைவர்கள் கட்சி தாவல் தொடர்ந்து நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Arun
First published: