முகப்பு /செய்தி /இந்தியா / வயல்காட்டில் கண்டெடுக்கப்பட்ட புலிக்குட்டிகள்... தாயின் வருகைக்காக காத்திருக்கும் வனத்துறையினர்..!

வயல்காட்டில் கண்டெடுக்கப்பட்ட புலிக்குட்டிகள்... தாயின் வருகைக்காக காத்திருக்கும் வனத்துறையினர்..!

புலிக்குட்டிகள்

புலிக்குட்டிகள்

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஆத்மகூறு அருகே அதிகாலையில் நான்கு புலிக்குட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாய் புலி இல்லாமல் குட்டிகள் தனியாக இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Janvi

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஆத்மகூறு அருகே உள்ள வனப்பகுதியில் ஒட்டிய வயலில் நான்கு புலிக்குட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிறந்த சில தினங்களே ஆனதாகக் கருதப்படும் இந்த புலிக்குட்டிகளை அப்பகுதி மக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதிகாலையிலேயே வயலில் தென்பட்ட புலிக்குட்டிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஆத்மகூறு அருகே நல்லமலை வனப்பகுதியை ஒட்டி இருக்கும் வயல்வெளியில் இன்று காலை நான்கு புலி குட்டிகள் காணப்பட்டன. பிறந்து ஓரிரு நாட்களே ஆகி இருக்கலாம் என்ற கருதப்படும் அந்த புலிக்குட்டிகள் நான்கையும் இன்று காலை வயலுக்குச் சென்ற விவசாயிகள் பார்த்தனர்.

புலிக்குட்டிகளை நாய்கள் கடித்து இழுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் இருந்ததால் அவற்றை விவசாயிகள் கிராமத்திற்கு எடுத்து வந்து ஓர் அறையில் வைத்துப் பூட்டி பாதுகாத்தனர்.

புலிக்குட்டி

இது பற்றி வனத்துறையினருக்கு விவசாயிகள் அளித்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் புலிக் குட்டிகளைக் கைப்பற்றி அவற்றைத் தாய் புலி விட்டுச் சென்ற பகுதிக்குக் கொண்டு சென்று தாய் புலியின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.

First published:

Tags: Forest Department, Tiger