Home /News /national /

கொட்டும் மழையில் தார் ரோடு போட்ட ஒப்பந்ததாரர்.. பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட்

கொட்டும் மழையில் தார் ரோடு போட்ட ஒப்பந்ததாரர்.. பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட்

கொட்டும் மழையும் சாலை போட்ட ஒப்பந்ததாரர்

கொட்டும் மழையும் சாலை போட்ட ஒப்பந்ததாரர்

அப்பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி ஊழியர் குர்விந்தர் சிங், மழை பெய்யும் போது இவ்வாறு சாலை போடுவது முறையல்ல என புகார் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக தார் சாலை போட்ட காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்று மாநிலத்தில் முதல் முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சி மட்டுமே அரசின் தாரக மந்திரம் எனக் கூறி அடிப்படை வசதிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துவதாக முதலமைச்சர் பகவந்த் மான் கூறிவருகிறார்.

    அத்துடன் ஊழலற்ற தூய்மையான நிர்வாகமே ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை விதி என அவர் கூறி, ஊழல் புகார்களுக்கு ஆளாகும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இந்நிலையில், அம்மாநிலத்தின் ஹோஷியார்பூர் என்ற பகுதியில் பொதுப்பணித்துறை ஒப்பந்தரார்கள் தார் சாலை போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பணி செய்யும் போது அங்கு மழை வேகமாக பெய்யத் தொடங்கியது. இந்த சூழலிலும் பணியை நிறுத்தாமல் சாலை போடுவதைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளனர்.

    அப்பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி ஊழியர் குர்விந்தர் சிங், இவ்வாறு சாலை போடுவது முறையல்ல, சாலை தரமற்றதாக இருக்கும் எனவே மழை நேரத்தில் வேலையை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அவரின் பேச்சை கேட்காமல் பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்கள் வேலையை தொடர்ந்து செய்துள்ளனர்.


    இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்னின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகார் அளிக்கவுள்ளேன் என குர்விந்தர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கள்ளக்காதலியுடன் மாலத்தீவுக்கு ரகசிய பயணம்.. மனைவியிடம் மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்த கணவர் கைது

    இந்நிலையில், கொட்டும் மழையிலும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் தார் சாலை போடுவது காணொலியாக சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த திட்டத்தில் ஈடுபட்ட நான்கு பொதுப்பணித்துறை பொறியாளர்களை அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Aam Aadmi Party, Punjab

    அடுத்த செய்தி