ஹோம் /நியூஸ் /இந்தியா /

மேற்குவங்கத்தில் 4 பேருக்கு சீனாவின் உருமாறிய கொரோனா! தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை!

மேற்குவங்கத்தில் 4 பேருக்கு சீனாவின் உருமாறிய கொரோனா! தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் என்பதால் தொற்று பாதித்தவர்கள் அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • West Bengal, India

மேற்கு வங்காளத்தில் 4 பேருக்கு பி.எப்-7 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பி.எப். 7 என்ற உருமாறிய கொரோனா வைரசால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருவதாகவும், ஆய்வுத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மேற்குவங்கத்தில் 4 பேருக்கு பி.எப்-7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொற்று பாதித்தவர்கள் அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.BF7 கொரோனா பாதிப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றாலும், அடுத்த 30-40 நாட்களில் இதன் பாதிப்பு இந்தியாவில் நிச்சயம் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்திருந்தது. பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய தடுப்பூசி நிபுணர்கள் குழு இணைந்து BF 7 திரிபு கொரோனா பாதிப்பிற்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளின் செயல்பாடுகளை மேப்பிங் முறையில் ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'சீனாவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட யாருக்கும், 'பி.எப்., 7' கொரோனா தொற்று பாதிப்பில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்திருக்கிறார்.

First published:

Tags: China, Corona, Corona positive, CoronaVirus, Covid-19