முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகா: காபி தோட்டத்தில் பாகிஸ்தானின் வெற்றி கொண்டாட்டம்.. கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள்!

கர்நாடகா: காபி தோட்டத்தில் பாகிஸ்தானின் வெற்றி கொண்டாட்டம்.. கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள்!

கர்நாடகாவில் 4 சிறார்கள் கைது

கர்நாடகாவில் 4 சிறார்கள் கைது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடிய 4 சிறார்கள் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து இந்தியா வெளியேறி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதேபோல் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சிக்கமக்களூருவில் உள்ள பாலேஒன்னூர் என்ற பகுதியில் காபி தோட்டம் உள்ளது. இந்த காபி தோட்டத்தில் பணிபுரியும் நான்கு இளைஞர்கள், கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியதை ஆர்ப்பரித்துக் கொண்டாடியுள்ளனர். மேலும் பாகிஸ்தான் வாழ்க என கோஷம் எழுப்பியுள்ளனர். இது அங்கிருந்தவர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தோட்டத்தின் மேலாளருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழவே காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: காதலியை கொன்று இன்ஸ்டாவில் வீடியோ.. இளைஞரின் கொடூர செயல் - ம.பி-யில் அதிர்ச்சி

தொடர்ந்து காவல்துறை நான்கு பேரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் எனவும் ஆசாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதாகவும் தகவல் தெரிவிக்கின்றது. இந்த சூழலில் இவர்களை கைது செய்த காவல்துறை, நால்வரும் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

First published:

Tags: Arrested, Karnataka, Pakistan cricket