ஜம்மு - காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

கோப்புப் படம்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 • Share this:
  ஜம்மு காஷ்மீர் நஹ்ரோடா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்  நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்திய எல்லைக்குள் நுழைந்த அவர்களை பாதுகாப்புப்படையினர் தகுந்த நேரத்தில் பன் சுங்கச்சாவடி அருகே சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

  அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. நக்ரோட்டாவில் இருந்து ஜம்முவை நோக்கி அவர்கள் பேருந்தில் பயணம் செய்ய முயன்ற போது சிக்கினர். அவர்களிடம் சோதனை நடத்தும்போது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதில் ஒரு போலீசுக்கு காயம் ஏற்பட்டது.

  பதிலுக்கு இந்திய பாதுகாப்புப்படையினர் தாக்கியதில் நால்வரும் உயிரிழந்தனர். அதிகாலை 5 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது.

  மேலும் படிக்க...தேர்ச்சி எனக் கூறி மாணவர்களை முதல்வர் ஏமாற்றிவிட்டார்..’ மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..  இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த தாக்குதலில் குறைந்தது 12 பொதுமக்கள் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டு வீசினர். இப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் தேடுதல் நடந்து வருகிறது. தாக்குதல் நடந்த உடனேயே, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய முழுப் பகுதியும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vaijayanthi S
  First published: