ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரபல ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா.. தம்பதிகளின் அந்தரங்கத்தை படம்பிடித்து மிரட்டிய 4 பேர் கைது

பிரபல ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா.. தம்பதிகளின் அந்தரங்கத்தை படம்பிடித்து மிரட்டிய 4 பேர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா வைத்து தம்பதிகளின் நெருக்கமான தருணங்களைப் பதிவு செய்து மிரட்டிய நபர்களை கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Uttar Pradesh, India

  நொய்டாவில்  ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா வைத்து தம்பதிகளின் நெருக்கமான தருணங்களைப் பதிவு செய்து மிரட்டிய நான்கு நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

  உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஓயோ நிறுவனத்தின் ஹோட்டல் அறையை ஒரு தம்பதியினர் புக் செய்து தங்கியுள்ளனர். ஒரு கும்பல் தம்பதி அங்குத் தங்கியிருந்த போது  அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் அந்தரங்கத்தை வீடியோவாக ரகசிய கேமரா மூலம்  எடுத்துள்ளனர். பின்னர், பணம் கேட்டு மிரட்டிய அவர்கள், வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

  இது தொடர்பாக போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இந்த வழக்கில் குற்றவாளிகளாக நொய்டா காவல்துறை நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இவர்கள்  ஹோட்டல் அறையை புக் செய்து தங்குவது போல் அறையில் ரகசிய கேமராவை வைத்துள்ளனர். பின்னர் அறையை காலி செய்து சென்றுள்ளனர்.

  சில நாட்கள் கழித்து மீண்டும் அதே அறையை புக் செய்து ரகசியமாக வைக்கப்பட்ட கேமராவை எடுத்து அதில் பதிவான வீடியோக்களை வைத்துச் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

  அப்படி ஒரு தம்பதியினர் நெருக்கமாக இருந்ததை  வீடியோவாக பதிவு செய்து அவர்களைப் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தரவில்லை என்றால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்று  பணம் பறிக்க முயன்றுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதையும் படிங்க: பெண் ஐடி ஊழியரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்..10 பேர் மீது வழக்கு பதிவு-ஜார்கண்டில் அதிர்ச்சி!

  இது தொடர்பாக, விஷ்ணு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார் மற்றும் அனுராக் குமார் சிங் என்ற 4 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்த காவல்துறை அவர்களிடம் இருந்து 11 லேப்டாப்கள், 7 சிம்கள், 21 மொபைல்கள், பல்வேறு வங்கிகளின் 22 ஏடிஎம் கார்டுகள், ஒரு பான் கார்டு, ஒரு ஆதார் கார்டு மற்றும் ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றியுள்ளனர்.

  இதில் விஷ்ணு சிங், அப்துல் வஹாவ் வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதைச் செய்துள்ளனர். மேலும் பங்கஜ் குமார், குற்றச் செயலுக்குத் தேவையான போன் வசதி, பணம் பெற வங்கிக் கணக்கு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Crime News, Noida