ஆந்திராவில் லாரி மீது செம்மர கடத்தல் கார் மோதி விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..

ஆந்திராவில் லாரி மீது செம்மர கடத்தல் கார் மோதி விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..

போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக செம்மர கடத்தல்காரர்கள் கார்களை வேகமாக ஓட்டிச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக செம்மர கடத்தல்காரர்கள் கார்களை வேகமாக ஓட்டிச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 • Share this:
  ஆந்திர மாநிலம் கடப்பா அருகே இன்று அதிகாலை டிப்பர் லாரி ஒன்றின் மீது செம்மர கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் டிப்பர் லாரி, இரண்டு கார்கள் ஆகியவை எரிந்து போன நிலையில் ஒரு காரில் பயணம் செய்த 4 பேர் காரில் இருந்தபடியே எரிந்து சாம்பலாகினர். மற்றொரு காரில் இருந்த 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

  இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் சேலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. செம்மரக்கடத்தல் கும்பல் கடப்பா மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி காரில் ஏற்றி வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் தங்கள் வாகனத்தில் கடத்தல் கும்பலை விரட்டி சென்றுள்ளனர்.

  போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக கடத்தல் கும்பல் இரண்டு கார்களையும் வேகமாக ஓட்டி சென்றுள்ளனர்.
  அப்போது எதிர்பாராத வகையில் டிப்பர் லாரி ஒன்று மீது இரண்டு கார்களும் மோதி விபத்து ஏற்பட்டது.

  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்கள்


  இந்த விபத்து காரணமாக டிப்பர் லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.மேலும்  தீ விபத்தில் மூன்று வாகனங்கள் எரிந்து  விட்ட நிலையில் ஒரு காரில் இருந்த 4 பேர் உடல்கள் கருகி உயிரிழந்தனர். மற்றொரு காரில் இருந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

  மேலும் படிக்க...பீகாரில் நாளை 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது..


  இந்நிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காயமடைந்தவகள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
  Published by:Vaijayanthi S
  First published: