ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தூங்கி கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முலக்கலேது கிராமத்தை சேர்ந்தவர் ஜானி பாய். இவர் தனது வீட்டில் அவருடைய மகன் தாடு, மருமகள் சர்புனி, பேரன் பெரோஸ் ஆகியோருடன் வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் வீடு கடும் சேதம் அடைந்த நிலையில் அங்கு தூங்கி கொண்டிருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 3 வயது குழந்தையும் அடக்கம்.
இந்த சம்பவத்தில் அருகில் உள்ள இரண்டு வீடுகளும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. அண்டை வீட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பற்றிய தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திர்கு விரைந்து சென்றனர்.
இதையும் படிங்க:
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு!
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளனர். சிலிண்டர் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.