தெலுங்கானா மாநிலம் காமரெட்டி நகரில் துணி காயப்போட்டபோது தாய், தந்தை, இரண்டு குழந்தைகள் ஆகியோர் மின்சாரம் தாக்கி மரணமடைந்தனர்.
காமா ரெட்டி நகரில் உள்ள பீடி தொழிலாளர்கள் காலனியை சேர்ந்தவர் அகமது (35) ஆட்டோ ஓட்டுநர். அவர் மனைவி பர்வீன் (30), மகள் மஹீம் (6), மகன்கள் பைசான் (5), அத்னான் (3) ஆகியோருடன் சிறிய ஓலை வீட்டில் வசித்து வந்தார்.
பைசான் தனது பாட்டி வீட்டுக்குச் சென்று இருந்தான். மற்றவர்கள் வீட்டிலிருந்தனர். அப்போது வீட்டின் சுவரில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் பர்வீன் துணிகளை உலர்த்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அகமதுவும் மின்சாரம் தாக்கி இறந்தார். பெற்றோர்கள் விழுவதைப் பார்த்த அவர்களது மகள் மஹீம், மகன் அத்னான் ஆகியோர் என்ன நடக்கிறது என்று புரியாமல் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
அப்போது அவர்கள் இரண்டு பேரையும் மின்சாரம் தாக்கி நான்கு பேரும் பரிதாபமாக மரணமடைந்தனர்.
மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தவர்கள் எழுப்பிய அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து மின் இணைப்பைத் துண்டித்து
மின்சாரத்தை நிறுத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மரணம் அடைந்த நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது. இரும்பு கம்பிக்கு அருகில் சென்ற வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதை அறியாமல் அந்த கம்பி மீது பர்வீன் துணிகளைக் காயப் போட முயன்றுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.