ஹோம் /நியூஸ் /இந்தியா /

மேடையில் புர்கா அணிந்து நடனமாடிய கல்லூரி மாணவர்கள் - சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் நடவடிக்கை

மேடையில் புர்கா அணிந்து நடனமாடிய கல்லூரி மாணவர்கள் - சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் நடவடிக்கை

புர்கா அணிந்து நடனமடிய மாணவர்கள்

புர்கா அணிந்து நடனமடிய மாணவர்கள்

நடனத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் இந்த நடனத்திற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி ஏதும் அளிக்கவில்லை எனவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகா மாநிலத்தில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் சினிமா பாடலுக்கு புர்கா அணிந்து நடனமாடிய நான்கு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே உள்ள வமன்ஜூர் என்ற இடத்தில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர் சங்க தொடக்க விழா கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஆடி, படி கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.

அப்போது, திடீரென்று புர்கா அணிந்து கொண்டு மேடை ஏறிய நான்கு மாணவர்கள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடினர். கீழே உள்ள மாணவர்கள் இதற்கு ஆர்பரித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகத் தொடங்கி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், புர்கா சர்ச்சை குறித்து கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

அதில், நடனத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் இந்த நடனத்திற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி ஏதும் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறிய நிர்வாகம், நடனமாடிய நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்துள்ளது.

இதையும் படிங்க: தவறி விழுந்து ரயில் பிளாட்பாரத்தில் சிக்கிய மாணவி..சிகிச்சை பலனின்றி பரிதாப மரணம்

மேலும் மத ரீதியான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலை கல்லூரி ஒரு போதும் அனுமதிக்காது எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஏற்கனவே, கல்வி நிலையங்களில் மாணவிகள் புர்கா அணிவது தொடர்பான சர்ச்சை கர்நாடகாவை மையமாகக் கொண்டு எழுந்த நிலையில், கல்வி நிலையங்களுக்குள் புர்கா அணிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் இந்த புர்கா நடனம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: College student, Dance, Karnataka, Viral Video