தண்டவாளத்தில் ஒரு கி.மீ இடைவெளியில் 4 சடலங்கள்...!

தண்டவாளத்தில் சடலங்கள்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆந்திரப்பிரதேசம் மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்துபுரம் ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு சடலம் என்ற அடிப்படையில் நான்கு சடலங்கள் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனந்தபூர் மாவட்டம் ஹிந்துபுரம் நகரத்திலுள்ள ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில் 4 சடலங்கள் கிடப்பதாக ஹிந்து புரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதை முன்னிட்டு போலீசார் தண்டவாளத்தை பார்வையிட்ட போது ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் ஒரு ஆண் சடலம் காணப்பட்டது.

    மேலும் ஒரு கிலோமீட்டர் வரை சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெண் சடலம் காணப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து தண்டவாளத்தை சோதனை செய்த போது ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு சடலம் விதமாக மொத்தம் இரண்டு ஆண் சடலங்கள் 2 பெண் சடலங்கள் ஆகியவை இருந்தன.

    தண்டவாளத்தில் கிடந்த சடலங்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக ஹிந்துபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா? அல்லது தனித்தனி குடும்பத்தை சேர்ந்தவர்களா? என்றும், நான்கு பேரும் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாராவது கொலை செய்து சடலங்களை தண்டவாளத்தின் மீது வீசிவிட்டு சென்று விட்டார்களா என பல கோணங்களில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Published by:Sankar
    First published: