பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 4 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

news18
Updated: June 13, 2018, 8:16 PM IST
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 4 இந்திய வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீரில் தாக்குதல் - 4 இந்திய வீரர்கள் உயிரிழப்பு - கோப்பு படம்
news18
Updated: June 13, 2018, 8:16 PM IST
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைத்தாண்டி நடத்திய தாக்குதல் சம்பவத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.

ரம்ஜான் மாதத்தையொட்டி காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. எனினும், பாகிஸ்தான் ராணுவம் அதை மதிக்காமல், எல்லத்தாண்டி தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

சம்பா மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை இரவு சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதில், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்த நான்கு பேரில் மூவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. உதவி கமாண்டெண்ட் ஜித்தேந்திர சிங், உதவி ஆய்வாளர் ரஜனீஷ் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் ராம்னி, காவலர் ஹன்ஸ்ராஜ் ஆகியோர் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தனர்.

மே மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 67 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் எல்லைப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய எல்லைப்பாதுகாப்புப் படை கூடுதல் இயக்குநர் கமல்நாத் சௌபே, போர் நிறுத்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எல்லையைப் பாதுகாப்பதில் பி.எஸ்.எப். எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்தத்தை மதிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...