ஹோம் /நியூஸ் /இந்தியா /

நண்பனின் காதலியுடன் நெருக்கமாக பழக்கம்... கல்லூரி மாணவர் மீது சரமாரி தாக்குதல்

நண்பனின் காதலியுடன் நெருக்கமாக பழக்கம்... கல்லூரி மாணவர் மீது சரமாரி தாக்குதல்

சமூக வலைத்தளங்களில் வைரலான தாக்குதல் வீடியோ

சமூக வலைத்தளங்களில் வைரலான தாக்குதல் வீடியோ

ஆந்திரப் பிரதேச தனியார் கல்லூரி விடுதியில் ஒரு மாணவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக அவரின் நான்கு நண்பர்கள் கைதாகியுள்ளனர்.

 • 1 minute read
 • Last Updated :
 • Andhra Pradesh, India

  ஆந்திரப் பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் பகுதியில்  செயல்பட்டு வரும்  தனியார் பொறியியல் கல்லூரியில் அங்கித் என்ற மாணவர் பிடெக் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.இவருடன் பிரவீன், பிரேம் குமார், ஸ்வரூப், நீரஜ் ஆகிய நான்கு மாணவர்கள் அதே கல்லூரி விடுதியில் தங்கி ஒன்றாக படித்து வந்துள்ளனர்.

  இந்நிலையில், அங்கித்தை இந்த நான்கு மாணவர்களும் விடுதி அறையில் வைத்து கொடூரமாக தாக்கும்  வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. தன்னை விட்டு விடுங்கள் என அங்கித் கதறும் நிலையில், விடாமல் குச்சியைக் கொண்டு அவரை நான்கு பேரும் தொடர்ந்து அடித்து தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான அங்கித் பீமாவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், காவல்துறை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டது. அதில், காதல் விவகாரம் தொடர்பாக தான் இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த ஐந்து பேரும் உற்ற நண்பர்கள் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரில் ஒருவரின் காதலியிடம் அங்கித் நெருக்கமாக பழகத் தொடங்கியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்து அங்கித்தை இவர்களை இப்படி அடித்துள்ளதாகவும் விசாரணையில் கூறப்படுகிறது.

  இந்நிலையில், தாக்குதல் நடத்திய நான்கு மாணவர்களை கைது செய்த காவல்துறை அவர்கள் மீது இபிகோ 384,324,342,506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Andhra Pradesh, College student, Viral Video