ஹோம் /நியூஸ் /இந்தியா /

முலாயம் சிங் யாதவிற்கு உடல் நலக்குறைவு.. அகிலேஷிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

முலாயம் சிங் யாதவிற்கு உடல் நலக்குறைவு.. அகிலேஷிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு

முலாயம் சிங் யாதவ்

முலாயம் சிங் யாதவ்

நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

    உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி நிறுவனரும் முலாயம் சிங் யாதவிற்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நேற்று மாலை குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    82 வயதான முலாயம் சிங் யாதவ்விற்கு முன்னணி மருத்துவர்கள் நிதின் சூட் மற்றும் சுஷில் கதாரியா ஆகியோரின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த முலாயம் சிங்கிற்கு நேற்று உடல் நிலை மோசமானதால், அவரது உறவினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு படையெடுத்து நலம் விசாரித்து வருகின்றனர். முலாயம் சிங்கின் மகனும் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் மருத்துவமனைக்கு விரைந்தார். அதேபோல், முலாயம் சிங்கின் சகோதரர் சிவ்பால் சிங் யாதவும் மருத்துவமனையில் உள்ளார்.

    முலாயம் சிங் உடல் நிலை குறித்த செய்தி வெளியானதும், பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பல்வேறு தலைவர்கள் அவர் குணமடைய வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகின்றனர். அகிலேஷ் யாதவை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என உறுதி அளித்துள்ளார்.

    அதேபோல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் அகிலேஷ் யாதவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அதேபோல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோரும் முலாயம் உடல் நலம் பெற வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: காந்தி பிறந்த நாளில் 3,000 கிமீ பாதயாத்திரை தொடக்கம்.. பீகார் அரசியலுக்கு அடித்தளம் போடும் பிரசாந்த் கிஷோர்!

    சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவரான முலாயம் சிங் யாதவ், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்துள்ளார். அதேபோல் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ள இவர், நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மிக சில நபர்களில் ஒருவர் என்ற பெருமையும் கொண்டுள்ளார். முலாயம் இதுவரை 10 முறை எம்எல்ஏவாகவும், 7 முறை எம்பியாகவும் வெற்றி பெற்றுள்ளார்.

    Published by:Kannan V
    First published:

    Tags: Akilesh yadav, CM MK Stalin, PM Modi, Samajwadi party, Uttar pradesh