ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக முன்னாள் மத்திய இணையமைச்சர் மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்
File photo of Manoj Sinha (PTI)
  • News18
  • Last Updated: August 6, 2020, 10:20 AM IST
  • Share this:
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்ப பெறப்பட்டது. மேலும், அம்மாநிலம், இரண்டாக பிரிக்கப்பட்டது. லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் செயல்பட்டுவரும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிரிஷ் சந்திரா மர்மு, அக்டோபர் 31-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநர் என்ற பெயரைப் பெற்ற கிரிஷ் சந்திரா மர்மு, 9 மாத பதவிக்காலத்திற்குப் பின்னர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.


மத்திய, மாநில அரசுகளின் வரவு,செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் சி.ஏ.ஜி அமைப்பின், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பதவிக்கு மர்மு நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவையில், ரயில்வே துறையின் இணையமைச்சராக பதவிவகித்தவர் மனோஜ் சின்ஹா.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் காஸிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading