Home /News /national /

சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழப்பு

சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழப்பு

சைரஸ் மிஸ்திரி

சைரஸ் மிஸ்திரி

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India
    மும்பை அருகே நடந்த கார் விபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54) உயிரிழந்தார். அகமதாபாத்தில் இருந்து மும்பை திரும்பிய போது பால்கரில் உள்ள சாரோட்டியில் விபத்து நடந்துள்ளது. சூர்யா ஆற்றின் பாலத்தில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அவர் பயணித்த சொகுசு கார் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  2012 முதல் 2016 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் சைரஸ் மிஸ்திரி.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Accident, Mumbai

    அடுத்த செய்தி