Home /News /national /

இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்ச.. உரிய பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு முடிவு

இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்ச.. உரிய பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு முடிவு

கோத்தபய ராஜபக்ச

கோத்தபய ராஜபக்ச

Gotabaya Rajapaksa : கோத்தபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை மற்றும் ராணுவம் அடங்கிய படைக்குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, IndiaSri lanka
    ஏழு வார கால வெளிநாடு தங்கலுக்குப் பிறகு இலங்கை திரும்பினார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச.

    இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து அதிபரின் அதிகாரப்பூர்வ வீட்டுக்குள் புகுந்து பொதுமக்கள் சூறையாடினர். அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாத மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூர் தப்பிச் சென்றார். அங்கிருந்து பின்னர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்குச் சென்று தங்கினார்.

    அங்கிருந்தபடியே தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பினார். அங்கு சிறைக்கைதி போல் ஒரே அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில் 52 நாட்களுக்குப் பிறகுநேற்றரவு கொழும்பு வந்தடைந்தார். அவரை அமைச்சர்களும், அதிகாரிகளும் மாலை சூட்டி வரவேற்பு அளித்தனர்.

    கோத்தபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை மற்றும் ராணுவம் அடங்கிய படைக்குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது அதில் கமாண்டோக்கள் இடம்பெற்றுள்ளனர்.

     

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Former President of Sri Lanka Mahinda Rajapaksa, Gotabaya Rajapaksa, Srilanka

    அடுத்த செய்தி