• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் - ராணுவ மருத்துவமனை தகவல்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் - ராணுவ மருத்துவமனை தகவல்

பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மூளையில் உள்ள கட்டியை நீக்குவதற்காக 2 வாரங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது.

    தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர் 4 நாட்களுக்கு முன்பு கோமா நிலைக்கு சென்றார். அவரது நுரையீரலிலும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் பலனாக பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    Also read... தோனி உட்பட 14 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ்...



    அதேசமயம் செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடனேயே அவர் சுவாசித்து வருவதாக மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: