Home /News /national /

பாஜகவில் ஐக்கியமாகும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்..!

பாஜகவில் ஐக்கியமாகும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்..!

பாஜகவில் கட்சியை இணைக்கும் கேப்டன் அம்ரீந்தர் சிங்

பாஜகவில் கட்சியை இணைக்கும் கேப்டன் அம்ரீந்தர் சிங்

காங்கிரஸ் கட்சியின் பிரதான தலைவராக இருந்த அம்ரீந்தர் சிங், கட்சி மேலிடம் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Punjab, India
    பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரான கேப்டன் அம்ரீந்தர் சிங் தனது புதிய கட்சியை பாஜகவுடன் இன்று இணைக்க உள்ளார். இன்று மாலை 4.30 அளவில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் அவர் தொடங்கிய பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை இணைக்கிறார். இந்த இணைப்பு விழாவில் அமரீந்தர் சிங்குடன் அவரது ஆதரவாளர்களான ஏழு முன்னாள் எம்எல்ஏக்கள், ஒரு முன்னாள் எம்பி ஆகியோரும் பாஜகவில் இணையவுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் பிரதான தலைவராக இருந்த அம்ரீந்தர் சிங், கட்சி மேலிடம் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகினர். பின்னர், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கினார்.பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நெருக்கமாகவும் ஆதரவாகவும் செயல்பட்டு வந்த அம்ரீந்தர் சிங் தற்போது தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொள்கிறார்.

    அமரீந்தர் சிங்கின் அரசியல் பின்னணி

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உற்ற தோழரான அம்ரீந்தர் சிங், ராஜீவின் அழைப்பால் 1980களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரான அம்ரீந்தர், சீக்கியர்களின் புனித இடமான தங்கக் கோயிலில் இந்திரா காந்தி நடத்திய ஆப்ரேஷன் புளு ஸ்டாருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் சிரோமணி அகாலிதளத்தில் இணைந்த அவர் மாநில அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.

    1992ஆம் ஆண்டில் சிரோமணி அகாலி தளத்தில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கிய அம்ரீந்தர், 1998ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இனைந்து கொண்டார். அப்போது அவரது நண்பரின் மனைவியான சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு வந்தார். பின்னர் 2002ஆம் ஆண்டு பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், மாநிலத்தின் முதலமைச்சரானார் அம்ரீந்தர் சிங். 2007ஆம் ஆண்டு சிரோமணி அகாலிதளம் மீண்டும் ஆட்சியை பிடித்ததால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த அவர், 2017ஆம் ஆண்டு தேர்தலை வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானார்.

    இதையும் படிங்க: யாத்திரையின்போது சிறுமிக்கு செருப்பு அணிவித்து உதவிய ராகுல் காந்தி... நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!

    மேலிடத்துடன் பனிப்போர்

    இவரது இரண்டாவது ஆட்சி காலத்தில் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சிக்கு நுழைந்து மேலிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். இவருக்கும் சித்துவுக்கு பனிப்போர் நிலவி வந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். பின்னர் மேலிடத்தின் அழுத்தம் காரணமாக 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அம்ரீந்தர் சிங், அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பின்னர் தனிக் கட்சி தொடங்கி தற்போது பாஜகவில் ஐக்கியமாகிறார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Amarinder Singh, BJP, PM Modi, Punjab

    அடுத்த செய்தி