Puducherry Assembly election 2021: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார்

Puducherry Assembly election 2021: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார்

நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான நாராயணசாமி தனது வாக்கைப் பதிவு செய்தார்.

  • Share this:
    புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான நாராயணசாமி தனது வாக்கைப் பதிவு செய்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரி மாநிலத்தில் மதவாத சக்திகளுக்கும், பிரிவினைவாத சக்திகளுக்கும் போட்டி நடைபெறுகிறது. மக்கள் மத்தியில் காங்கிரஸ் -திமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளது.

    என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த தேர்தலில் மத்திய பாஜக அரசு தனது அதிகார பலத்தாலும், பண பலத்தாலும் புதுச்சேரியில் ஜனநாயக படுகொலை செய்துள்ளது. இருந்தபோதிலும், புதுச்சேரி மக்கள் ஆதரவுடன் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும்” என்ற கூறினார்.



    Must Read : புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது

     

    இந்நிலையில், புதுச்சேரி எதிர்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி திலாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
    Published by:Suresh V
    First published: