முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது!

மறைந்த பூபென் ஹசாரிகா மற்றும் மறைந்த நானாஜி ஆகிய இருவரது விருதையும் அவரவர் குடும்பத்தார் பெற்றுக்கொண்டனர்.

Web Desk | news18
Updated: August 8, 2019, 7:07 PM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது!
பிரணாப் முகர்ஜி விருது பெறும் காட்சி
Web Desk | news18
Updated: August 8, 2019, 7:07 PM IST
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜி உடன் மறைந்த பாடகர்- இசையமைப்பாளர் பூபென் ஹசாரிகா மற்றும் மறைந்த சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். மறைந்த பூபென் ஹசாரிகா மற்றும் மறைந்த நானாஜி ஆகிய இருவரது விருதையும் அவரவர் குடும்பத்தார் பெற்றுக்கொண்டனர்.


பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 2008-ம் ஆண்டே நாட்டின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

மேலும், 1984-ம் ஆண்டில் மிகச் சிறந்த டாப் 5 இந்திய நிதி அமைச்சர்களுள் ஒருவர் என்ற கவுரவம், 1997-ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது, 2011-ம் ஆண்டு சிறந்த ஆட்சியாளர் விருது எனப் பல விருதுகளுக்கும் பிரணாப் முகர்ஜி சொந்தக்காரர் ஆவார்.

மேலும் பார்க்க: ‘செவ்வாய் கிரகத்தில் சிக்கினாலும் மீட்க வருவோம்’- சுஷ்மா ஸ்வராஜின் சாதனை வரலாறு!
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...