மாநிலங்களவையில் எம்.பியாக முன்னாள் பிரதமர் தேவகவுடா பதவியேற்பு

முன்னாள் பிரதமர் தேவகவுடா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

மாநிலங்களவையில் எம்.பியாக முன்னாள் பிரதமர் தேவகவுடா பதவியேற்பு
முன்னாள் பிரதமர் தேவகவுடா
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2020, 3:50 PM IST
  • Share this:
முன்னாள் பிரதமர் தேவகவுடா(87) மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான வெங்கய்யா நாயுடு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கடந்த ஜூன் மாதம் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவ கவுடா கன்னட மொழியில் பதவிப் பிரமாணம் செய்தார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து 1996க்குப் பிறகு இப்போதுதான் மாநிலங்களவையில் ஒருவர் பதியேற்றுள்ளார். “முன்னாள் பிரதமர், நம் நாட்டின் மிக மூத்த தலைவர்களுள் ஒருவர் அவைக்கு வருகை தந்துள்ளார்” என்று வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.



கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட்ட தேவகவுடா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
First published: September 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading