ராகுல் காந்தி திருமணமாகாதவர்: அவரிடம் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும் - சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி திருமணம் ஆகாதவர். அவரிடம் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று முன்னாள் எம்.பி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

 • Share this:
  கேரளாவில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. கேரளாவைப் பொறுத்தவரை ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி வைத்துள்ள நிலையில் கேரளாவில் நேரடியாக மோதுகின்றன. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ராகுல் காந்தி சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். சமீபத்தில் கேரளாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி மீனவர்களுடன் கடலுக்குச் சென்று குளித்து மகிழ்ந்தார். கல்லூரிக்குச் சென்று மாணவிகளுடன் உரையாடினார்.

  இந்தநிலையில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சுயேட்சை முன்னாள் எம்.பி ஜாய்ஸ் ஜார்ஜ், ‘மகளிர் கல்லூரிகளுக்கு, மட்டும் சென்று ராகுல் காந்தி பார்வையிடுகிறார். அவர் அங்கு சென்று பெண்கள் எப்படி நேராக நிற்க வேண்டும்? எப்படி குனிய வேண்டும்? என்று பாடம் எடுக்கிறார். அவர் அருகே சென்று அப்படி எதுவும் செய்யாதீர்கள். அவர் திருமணமாகாதவர். அவர் முன்னே பெண்கள் குனிந்து நிற்காதீர்கள். அவரிடம், பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்’ என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அவர் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

  பல்வேறு தரப்பினரும் அவருடைய பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்தநிலையில், ஜாய்ஸ் ஜார்ஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த ஜார்ஜ், ‘எரட்டயார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது அவதூறாக பேசிவிட்டேன். நான் பேசிய கருத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெறுகிறேன். பொதுத்தளத்தில் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: