மணிப்பூர் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த கோவிந்தாஸ் கோந்தூஜம், இன்று பாஜகவில் இணைந்தார்.
பாஜக தேசிய செய்தித்தொடர்பாளரான அனில் பலூனி இன்று பாஜகவில் முக்கியமான ஒருவர் இணைய இருப்பதாக காலையிலேயே ட்விட்டரில் சூசகமான தகவல் ஒன்றை வெளியிட்டு எதிர்பார்பை தூண்டிவிட்டார். அந்த சஸ்பென்ஸுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் கோவிந்தாஸ் கோந்தூஜம். இவர் அங்குள்ள பிஷ்னுபுர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் இருந்தார்.
Also Read: மது குடிப்பதால் 200 வகை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் - அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்..
கடந்த ஜூலை 28ம் தேதியன்று யாரும் எதிர்பாராத விதமாக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து திடீரென அவர் ராஜினாமா செய்தார். மேலும் பிஷ்னுபுர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தார்.
மணிப்பூரின் பிஷ்னுபுர் சட்டமன்ற தொகுதியில் இருந்து 6 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோவிந்தாஸ் கோந்தூஜம். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட அவர் இன்று டெல்லியில் உள்ள பாஜகவின் அகில இந்திய தலைமையகத்திற்கு வருகை தந்தார். மணிப்பூர் மாநில முதல்வரான பைரன் சிங் மற்றும் பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளரான சம்பிட் பத்ரா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
Also Read: அண்ணாமலையை சீண்டிய தயாநிதி மாறன்.. ட்விட்டரில் தந்த பதிலடி..
கோவிந்தாஸ் கோந்தூஜம் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சியை வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேலும் வலுப்படுத்தும். பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோவிந்தாஸ் கோந்தூஜம், “அடுத்த ஆண்டு மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது பாஜகவுக்காக கடுமையாக பணியாற்றுவேன். என தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்புக்கு பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்தார் கோவிந்தாஸ் கோந்தூஜம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனையடுத்து வடகிழக்கு மாநிலங்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளும் பிரதமர் மோடிக்கு என நன்றிகள் என கூறிய மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங், அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய மத்திய அமைச்சரவையில் வட கிழக்கு பகுதியைச் சேர்ந்த 5 பேர் மத்திய அமைச்சர்கள் ஆகியுள்ளனர். பிரதமர் மோடியின் அரசை மணிப்பூர் மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.