மாலத்தீவு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார் முன்னாள் துணை அதிபர்!

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்

அரசியல் காரணங்களால் முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் இந்தியாவில் தஞ்சம் அடைய தப்பி வந்ததாக கூறப்பட்டது

  • News18
  • Last Updated :
  • Share this:
மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப், இந்திய அதிகாரிகளால் நேற்று நள்ளிரவில் மாலத்தீவு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

சட்டவிரோதமாக கப்பலில் தூத்துக்குடி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதிப்பிடம் குடியுரிமை அதிகாரிகள் 2 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில், நேற்று நள்ளிரவில் அவர் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

மாலத்தீவுகளில் இருந்து தூத்துக்குக்கு சிறிய கப்பலில் உரிய ஆவணங்கள் இன்றி அகமது அதீப் வந்தார். இது தொடர்பாக உளவுத்துறையினரும், கடலோரக் காவல்படையினரும் கப்பலில் வைத்து விசாரித்து வந்தனர்.

டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்த குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அரசியல் காரணங்களால் முன்னாள் துணை அதிபர் அகமது அதிப் இந்தியாவில் தஞ்சம் அடைய தப்பி வந்ததாக கூறப்பட்ட நிலையில், இருநாட்டு உறவு பாதிக்கப்படாமல் இருக்க அவர் திருப்பி அனுப்பப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அவர் நடுக்கடலில் இந்திய அதிகாரிகளால், மாலத்தீவு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

Published by:Sankar
First published: