பொறியாளர் மீது சேற்றை அள்ளி ஊற்றி அவமானப்படுத்திய எம்.எல்.ஏ! வைரல் வீடியோ

மஹாராஷ்டிரா மாநிலம் கன்காவலி பகுதியில், மும்பை-கோவா நெடுஞ்சாலையில், கட்டப்படும் பாலத்தின் பணியை, காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதேஷ் ரானே ஆய்வு செய்தார். 

news18
Updated: July 4, 2019, 6:32 PM IST
பொறியாளர் மீது சேற்றை அள்ளி ஊற்றி அவமானப்படுத்திய எம்.எல்.ஏ! வைரல் வீடியோ
பாதிக்கப்பட்ட பொறியாளர்
news18
Updated: July 4, 2019, 6:32 PM IST
மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதேஷ் ரானே, அரசுப் பொறியாளர் மீது பொது இடத்தில் வைத்து சேற்றைக் ஊற்றி அவமானப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திரனாத் பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ.க, சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் கன்காவலி பகுதியில், மும்பை-கோவா நெடுஞ்சாலையில், கட்டப்படும் பாலத்தின் பணியை, காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதேஷ் ரானே ஆய்வு செய்தார். மஹாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் நாராயன் ரானேவின் மகன் தான் நிதேஷ் ரானே. அப்போது, பாலத்தின் கட்டுமானம் தரமில்லாததாக இருந்துள்ளது.எனவே, பாலத்தைக் கட்டும் பொறுப்பில் உள்ள அரசுப் பொறியாளர் பிரகாஷ் ஷேடேகரின் மீது நிதேஷ் ரானேவும் அவரது ஆதரவாளர்களும் சேற்றை அள்ளி ஊற்றினர். பொதுமக்கள் சூழ்ந்திருக்கும் இந்தச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளது.

முன்னதாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா, மாநகராட்சி அதிகாரியை பேட்டால் அடித்தார். இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது அதேபோன்றதொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Also see:

First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...