• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • கர்நாடக முன்னாள் அமைச்சர் கடத்தல்: தமிழகத்தில் இருந்த குற்றவாளிகளை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்...

கர்நாடக முன்னாள் அமைச்சர் கடத்தல்: தமிழகத்தில் இருந்த குற்றவாளிகளை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ்...

கர்நாடக முன்னாள் அமைச்சர் கடத்தப்பட்ட வழக்கில் சினிமா பாணியில் குற்றவாளிகளை பிடித்த போலீஸ்..

கர்நாடக முன்னாள் அமைச்சர் கடத்தப்பட்ட வழக்கில் சினிமா பாணியில் குற்றவாளிகளை பிடித்த போலீஸ்..

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வர்த்தூர் பிரகாஷை கடத்திய நபரை, பல நூறு கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து, போலீசார் பொறிவைத்து பிடித்துள்ளனர். 

 • Share this:
  கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் 65 வயதான வர்த்தூர் பிரகாஷ். அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தவர். தற்போது நம்ம காங்கிரஸ் என்ற கட்சியை நடத்தி வரும் வர்த்தூர் பிரகாஷ், கடந்த நவம்பர் 25ஆம் தேதி கோலாரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, பெக்லி கோசஹல்லி என்ற இடத்தில் வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல், வர்த்தூர் பிரகாஷையும், அவரது ஓட்டுநர் சுனிலையும் ஆயுதங்களை காட்டி மிரட்டி கடத்திச் சென்றனர். செல்லும் வழியில் இருவரையும் கடுமையாக தாக்கிய கும்பல், வர்த்தூர் பிரகாஷை விடுவிக்க வேண்டுமானால் 30 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டியது.

  ஆனால், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என வர்த்தூர் பிரகாஷ் கூறியதால், அவரை காரில் வைத்துக் கொண்டே கர்நாடகாவின் பல பகுதிகளில் கடத்தல் கும்பல் சுற்றி இருக்கிறது. ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் வர்த்தூர் பிரகாஷின் ஓட்டுநர் மயங்கிவிட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக நினைத்து, காரில் இருந்து தூக்கிவீசி விட்டு சென்றுள்ளது கும்பல்.

  கடத்தல் கும்பலின் சித்ரவதையை தாங்க முடியாத வர்த்தூர் பிரகாஷ், தனது நண்பருக்கு போன் செய்து, 48 லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்துள்ளார். இதனிடையே, மயக்கம் தெளிந்த வர்த்தூர் பிரகாஷின் ஓட்டுநர் சுனில், கடத்தல் சம்பவம் குறித்து போலீசில் தெரிவித்துள்ளார்.

  புகாரை அடுத்து, வர்த்தூர் பிரகாஷை போலீசார் தேடி வந்த நிலையில், நவம்பர் 26ஆம் தேதியன்று 48 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிய கடத்தல் கும்பல், சிவனபுரா என்ற பகுதியில் மைதானம் ஒன்றில் அவரை விட்டுச் சென்றது. காயங்களுடன் கிடந்த வர்த்தூர் பிரகாஷை பார்த்த பொதுமக்கள், அவரை கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

  இதையடுத்து, 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீஸ், ரோகித் அலியாஸ் என்பவரை கைது செய்தது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முக்கிய குற்றவாளியான ரவிராஜ், விருதுநகர் மாவட்டத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, விருதுநகர் சென்ற கர்நாடகா தனிப்படை போலீசார், ரவிராஜுடன் தாங்கள் அழைத்து வந்த ரோகித் அலியாசை பேசவைத்து சுற்றிவளைக்க திட்டமிட்டனர்.

  மேலும் படிக்க...கொரோனா காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுப்பு... வியாபாரிகள் வருமானம் இழந்து தவிப்பு..

  அதன்படி, ரவிராஜ் பதுங்கியிருந்த இடத்திற்கு ரோகித் அலியாஸை அனுப்பிவிட்டு, அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது போலீஸ். ரவிராஜ் இருப்பிடத்திற்கு சென்ற ரோகித் அலியாஸ், தன்னுடன் போலீஸ் வந்திருக்கும் தகவலை கூறியதும், இருவரும் ஒரே காரில் தப்பிச் சென்றனர். அவர்களை சினிமா பாணியில் கர்நாடக போலீசார் விரட்டிச் சென்றனர்.

  சாத்தூர் அருகே இ.ரெட்டியாபட்டி கிராமத்தில் சென்றபோது, ரோகித் அலியாஸ், ரவிராஜ் சென்ற கார் பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. இந்த நேரத்தில் காரில் இருந்து குதித்த ரோகித் அலியாஸ், அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் தப்பியோடினார். இதனிடையே, துரிதமாக செயல்பட்ட போலீசார், காரை ஓட்டிச் சென்ற ரவிராஜை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

  மேலும் படிக்க...அமெரிக்கா: விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் காந்தி சிலை அவமதிப்பு

  தாங்கள் ஏற்கனவே கைது செய்து அழைத்து வந்த ரோகித் அலியாஸ் காட்டுப் பகுதிக்குள் தப்பியோடியதால், ட்ரோன் கேமரா மூலம் அவரை தேடினர். ஆனால், அவர் இருப்பிடத்தை கண்டறிய முடியாததால், போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை சாத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: