கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, தனது உதவியாளரின் கன்னத்தில் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிவகுமாரை பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் கர்நாடகா காங்கிரஸில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
Also Read : காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் கைது! அமலாக்கத்துறை அதிரடி
இந்நிலையில் உதவியாளரை கன்னத்தில் அறைந்த சித்தராமையாவின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காங்கிரஸுக்கு மேலும் ஒரு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
மைசூருவில் செய்தியாளர் சந்திப்புக்காக சித்தராமையா வந்தார். அப்போது அருகில் நின்ற உதவியாளர் செல்போனில் யாரோ அழைப்பதாக சித்தராமையாவிடம் கொடுத்தார்.
அந்த நபருடன் பேச விரும்பாத சித்தராமையா, தனது உதவியாளரைக் கன்னத்தில் அறைந்ததுடன், அங்கிருந்து அகற்றினார். செய்தியாளர்கள் முன்னிலையில் சித்தராமையா இவ்வாறு நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Watch : சிவகுமார் கைது நடவடிக்கையின் பின்னணி!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.