செய்தியாளர் சந்திப்பின் போது கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா 'வந்தே மாதரம்' பாடத் தயங்கியதால் புதிய ஒரு சர்ச்சையைக் கிளம்பியுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில் இரண்டு உயர் காங்கிரஸ் தலைவர்களான டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் முன்னுரையைப் படித்து மாநாட்டைத் தொடங்கலாமா அல்லது 'வந்தே மாதரம்' பாடுவதன் மூலம் தொடங்கலாமா என்று ஆலோசிப்பதைக் காட்டுகிறது.
அரசியலமைப்பு தின நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன் சித்தராமையாவிடம் ஒருவர் 'வந்தே மாதரம்' பாட வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால் முன்னாள் முதல்வர் 'வந்தே மாதரம் தேவையில்லை' என்று கூறினார். பின்னர் அவர் 'நீங்கள் விரும்பினால் வந்தே மாதரம் பாடலை பின்னர் பாடுங்கள், இல்லையெனில் நான் வந்தே மாதரத்தை வேண்டாம் என்றேன் என்று சொல்லி விடுவார்கள்', என்று கூறியுள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் பாருங்க: குஜராத்தில் மும்முனை போட்டி - கிரீடம் யாருக்கு?
அரசியலமைப்பு தினத்தன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) கடுமையாக சாடி, பெங்களூரில் 'அரசியலமைப்பு தின அணிவகுப்பு' நடத்தினார் சித்தராமையா. அப்போது "பாஜக அரசு ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக ஒருபோதும் பாடுபடவில்லை. அவர்களின் ஆட்சியில் ஒரு சில சாதனைகளை சொல்ல முடியுமா?
இட ஒதுக்கீட்டை எதிர்த்தார்கள், அவர்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள். மண்டல் கமிஷன் முறையை எதிர்த்தார்கள். மாநிலம், பாஜக சமூக நீதிக்கு ஆதரவாக இருந்ததில்லை. இதற்கு முன்பும் இல்லை, இப்போதும் இல்லை, எதிர்காலத்திலும் இருக்க போவதில்லை’ என்று கருத்து தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டத்தில் ஒருபோதும் பங்களிக்கவில்லை என்றும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குற்றம் சாட்டினார். "சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்தவர்கள் யாராவது இறந்தார்களா? ஆர்.எஸ்.எஸ். பல சமயங்களில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள்" என்று கடுமையாக சாடி பேசியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM Siddramaiah, Karnataka