உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய போராட்டக்காரர்கள் வீடுகளை அதிகாரிகள் இடிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று 12 உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதத்தில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதர்ஷன் ரெட்டி, கோபால கௌடா, கே.கே.கங்குலி, உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, ஏ.பி.ஷா, கே.சந்துரு, முகம்மது அன்வர், சாந்தி பூஷன், இந்திரா ஜெய்சிங், சந்தர் உதய் சிங், ஸ்ரீராம் பன்சு, ஆனந்த் க்ரோவர், பிரசாந்த் பூஷன் ஆகியோர் கடிதம் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ‘உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிப்பவர்களை குறிப்பாக இதில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட அளவிலான காவல் அதிகாரிகள் மற்றும் மாநில அதிகாரிகள் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இது குடிமக்களின் அடிப்படை உரிமைக்கு எதிரான கொடூரமான ஒடுக்குமுறையாகும். போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டம் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் உத்தரப் பிரதேச மாநில அரசு நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது வன்முறையை ஏவிவிடுகிறது.
சட்டவிரோதமாக போராடுபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் 1980 மற்றும் உத்தரப் பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1986-ன் படி நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேசம் வழிகாட்டியுள்ளார். இது போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டவிரோதமாக துன்புறுத்த வழிவகை செய்யும். உத்தரப் பிரதேச காவல்துறை 300-க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளது.
காவல்துறை காவலில் இருக்கும் இளைஞர்கள் லத்தியால் தாக்கப்படும் வீடியோம், போராட்டத்தில் ஈடுபடுபர்களின் வீடுகள் எந்தவித முன்னறிவிப்பின்றி இடிக்கப்படும் வீடியோவும் போராட்டத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்பட்டு காவல்துறையால் தாக்கப்படும் வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகி தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. ஆளும் அரசால் கொடுரமான மிருகத்தனமான நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்தல், குடிமக்களுக்கான உரிமைகள் மீதான வன்முறையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையையும் கேலிக்கூத்தாக்குவதாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.