முன்னாள் IPS அதிகாரியின் தன்னலமற்ற செயல் - குவியும் பாராட்டுகள்!

முன்னாள் IPS அதிகாரியின் தன்னலமற்ற செயல் - குவியும் பாராட்டுகள்!

தமிழகத்திலும் இவரைப் போன்ற நேர்மையான விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரிகள் இன்னமும் மக்கள் சேவையை ஆற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் இவரைப் போன்ற நேர்மையான விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரிகள் இன்னமும் மக்கள் சேவையை ஆற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சுயநலத்துடன் சுற்றித்திரியும் மக்களிடத்தில் பொது நலத்தை காண்பது மிக மிக அரிது. அதுவும் நல்ல சம்பளத்தை கொண்டிருக்கும் இந்திய குடிமைப் பணிகளில் இரண்டாவதாக பேசப்படும் IPS பதவியை பொதுநலமும் காரணமாக உதறித்தள்ளிய ஒரு அதிகாரியின் உண்மை கதையைத் தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் அருண் ஓரான் என்ற IPS அதிகாரி தனது பதவியிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் விலகினார். மாநில சட்டமன்றத்திற்கு தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அவரது விருப்பம் இன்னும் நிறைவேறவில்லை என்றாலும், அவரின் உயரிய லட்சியமான மக்களுக்கு சேவை செய்வதை அவர் இன்னமும் நிறுத்தவில்லை. 

2014ல் விருப்ப ஓய்வு பெற்ற இவர், பஞ்சாப் கேடரின் முன்னாள் IPS அதிகாரி ஆவார். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக இருப்பதால் அதிருப்தி அடைந்த இவர், தனது வீட்டிலே மாணவர்களுக்கு இலவசமாக பாடத்தை கற்பிக்கத் தொடங்கினார். ஒரு மாணவனின் வேண்டுகோளின் பேரில், ஓரான் ராஞ்சியின் புறநகரில் உள்ள உச்சரி என்ற கிராமத்தில் ஒரு மாலைப் பள்ளியைத் (டியூசன்) தொடங்கினார். இப்போது, மொத்தம் 27 மாலை பள்ளிகள் ஓரோனின் வழிகாட்டுதலின் பேரில் ராஞ்சி, கும்லா மற்றும் லோஹர்டாகா கிராமங்களில் உள்ள சமூக மையங்களில் வெற்றிகரமாக நடந்துவருகின்றன. 

அவர்களிடமிருந்து எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாமல், ஓய்வுபெற்ற சில ஆசிரியர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் உட்பட சில வாழ்க்கை பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருகிறது. மாலை 6 முதல் 8.30 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஓரான் பயிற்சியளித்த உள்ளூர் தன்னார்வலர்கள் மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளதைக் கற்பிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு 'கூடுதல் அறிவையும்' வழங்குகிறார்கள். 

Also read... ’தி கிரே மேன்’ படத்தில் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்தது!

ஓரோனின் கூற்றுப்படி, கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளுக்குச் செல்கிறார்கள், அங்கு பெரும்பாலான டீச்சர்கள் வழக்கமாக கற்பித்தல் அல்லாத செயல்களில் ஈடுபடுகிறார்கள், இதனால் அவர்களின் முதன்மை கடமையில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது". ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாதபோது இந்த குழந்தைகள் எப்படி நாளை மருத்துவர்களாகவோ பொறியியலாளர்களாக மாறுவார்கள்?" என்று அவர் கேட்கிறார். 

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, பழங்குடி குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுடன் போட்டியிட முடியாததற்கு இதுவே காரணம் என்று ஓரான் கூறுகிறார். இதுபோன்ற அதிகாரிகள் நம்மிடையே இருப்பதால் தான் இன்னமும் மக்களிடையே மனிதம் நிலை பெற்றுள்ளது. பெரும்பாலான அரசியல்வாதிகளிடம் இல்லாத பல நற்குணங்கள் இதுபோன்ற சில அதிகாரிகள் கொண்டுள்ளனர். தமிழகத்திலும் இவரைப் போன்ற நேர்மையான விருப்ப ஓய்வு பெற்ற அதிகாரிகள் இன்னமும் மக்கள் சேவையை ஆற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: