பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாஜகவில் இணைந்தார்!
சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில் வளர்ச்சி கழகத்தின் செயலர் பதவியில் இருந்த ஏ.கே.சர்மா 2020 ஏப்ரலில் விருப்ப ஓய்வு பெற்றார்.

ஏ.கே.சர்மா
- News18 India
- Last Updated: January 14, 2021, 9:19 PM IST
பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவரும், குஜராத் மாநில ஐஏஎஸ் பேட்ச் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஏ.கே.சர்மா இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
உத்தரப்பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.சர்மா, குஜராத் மாநிலத்தின் 1988 பேட்ச் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த சர்மா அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவருடன் நெருக்கமாக பணிபுரிந்திருக்கிறார் சர்மா.
பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்தன் அடிப்படையில் லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக ஏ.கே.சர்மா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.சர்மா, மாவ் மாவட்டத்தின் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவனான நான், கடினமாக வேலை பார்த்து பல போராட்டங்களை சந்தித்து அதன் பின்னரே ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்தேன். விருப்ப ஓய்வு பெறும் வரையிலும் செயலர் அந்தஸ்திலேயே பணி புரிந்தேன்.

எந்த வித அரசியல் பின்புலமும் இன்றி என்னை போன்ற சாதாரண ஒருவர் பாஜகவில் சேருவது சாத்தியமாகிறது என்றால் அதற்கு காரணம் நரேந்திர மோடி தான். அவருக்கும், கட்சிக்கும், கட்சியின் தலைமைக்கும் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்/ என்னால் ஆன பங்களிப்பை கட்சிக்கு அளிப்பேன் என தெரிவித்தார்.சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில் வளர்ச்சி கழகத்தின் செயலர் பதவியில் இருந்த ஏ.கே.சர்மா 2020 ஏப்ரலில் விருப்ப ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 12 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வரும் 28ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்ற நிலையில் இத்தேர்தலில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சர்மா களம் இறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை,
தமிழகத்திலும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பாஜகவில் இணைந்து பின்னர் தமிழக பாஜகவின் துணை தலைவரானது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.சர்மா, குஜராத் மாநிலத்தின் 1988 பேட்ச் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த சர்மா அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவருடன் நெருக்கமாக பணிபுரிந்திருக்கிறார் சர்மா.
பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்தன் அடிப்படையில் லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக ஏ.கே.சர்மா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.