முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி

News18 Tamil
Updated: August 9, 2019, 8:57 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி
News18 Tamil
Updated: August 9, 2019, 8:57 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி  உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அருண் ஜெட்லி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

66 வயதாகும் அருண் ஜெட்லி, மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தார்.


இவருக்கு கடந்த ஆண்டு சிறுநீரக அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது.  இதையடுத்து, மிகுந்த உடல் நலிவடைந்த அவர், தான் வகித்து வந்த அமைச்சர் பொறுப்பில் கவனம் செலுத்த முடியாததால், புதிய அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் எழுதியிருந்தார்.
First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...