முகப்பு /செய்தி /இந்தியா / பாஜகவில் இணைந்த கிரிக்கெட் பிரபலம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

பாஜகவில் இணைந்த கிரிக்கெட் பிரபலம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

Dinesh mongia

Dinesh mongia

தினேஷ் மோங்கியா மற்றும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் வருகை பாஜகவுக்கு மேலும் தெம்பை அளித்திருக்கிறது.

  • Last Updated :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தினேஷ் மோங்கியா பாஜகவில் இணைந்துள்ளார்.

பஞ்சாபை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் தினேஷ் மோங்கியா டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று முறைப்படி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவருடன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வாவின் சகோதரரும் Qadian தொகுதி எம்.எல்.ஏவான ஃபதேஜங் பஜ்வா மற்றும் SRI HARGOBINDPUR தொகுதி எம்.எல்.ஏவான பல்விந்தர் சிங் லட்டி ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர். இதன் மூலம் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

தினேஷ் மோங்கியா மற்றும் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் வருகை பாஜகவுக்கு மேலும் தெம்பை அளித்திருக்கிறது.

சண்டிகரில் பிறந்தவரான 44 வயதாகும் தினேஷ் மோங்கியா 2001ம் ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானார். வங்கதேசத்துடனான 2007ல் நடைபெற்ற போட்டியில் தினேஷ் மோங்கியா ஆடியதே இந்தியாவுக்காக அவர் ஆடிய கடைசி போட்டியாகும். இதுவரை 57 ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு டி20 போட்டியிலும் ஆடியிருக்கும் இடக்கை ஆட்டக்காரரான தினேஷ் மோங்கியா, பஞ்சாப் கிரிக்கெட் அணிக்காக 121 முதல்தர போட்டிகளில் ஆடி 8,028 ரன்கள் (48.95 சராசரி) சேர்த்துள்ளார். இதில் 27 சதங்களும், 28 அரை சதங்களும் அடங்கும்.

Also read:  மேடையில் நாற்காலிக்காக சண்டை போட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ

தென் ஆப்பிரிக்காவில் 2003ல் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் மோங்கியா இடம்பிடித்திருந்தார். இந்தப் போட்டியில் ஃபைனலில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அரசியல் பாதையை தேர்ந்தெடுத்திருக்கும் தினேஷ் மோங்கியா கடந்த 2019ம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எதிர்வரும் தேர்தலில் பாஜக சார்பாக மொகாலி தொகுதியில் போட்டியிட தினேஷ் மோங்கியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

Also read:  பிரதமர் மோடியின் புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார் - என்ன ஸ்பெஷல்?

top videos

    பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்காக முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் சுக்தேவ் திண்ட்சாவின் ஷிரோமனி அகாலி தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தியிருக்கும் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: BJP, Punjab