முகப்பு /செய்தி /இந்தியா / மாநகராட்சி ஊழியர்களை உதைத்து, உக்கி போட வைத்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ - வீடியோ வைரல்

மாநகராட்சி ஊழியர்களை உதைத்து, உக்கி போட வைத்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ - வீடியோ வைரல்

Screen Grab - Viral Video

Screen Grab - Viral Video

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், நகராட்சி ஊழியர்களை தாக்கி உதைத்து, அவர்களை உக்கி போட வைத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சமீபத்தில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர், நான்கு பேரை குச்சிகளால் அடித்தும், காலால் எட்டி உதைத்தும், காதைப் பிடித்துக் கொண்டு உக்கி போட வைத்ததும் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ வைரலான நிலையில் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் பேனர்களை மட்டும் குறிவைத்து அந்த நபர்கள் அப்புறப்படுத்தி வந்ததால் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டியதாக தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ அவர்கள் நகராட்சி ஊழியர்கள் என தனக்குத் தெரியாது என தெரிவித்தார். இதனிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ மீது நகராட்சியினர் அளித்த புகாரின் பேரில் அவரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டெல்லியின் ஓக்லா பகுதியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ முகமது ஆசிஃப் கான் தான் இந்த சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறார். இது குறித்து முகமது ஆசிஃப் கான் கூறுகையில், “ஓக்லா பகுதியில் இருக்கும் எனது வீட்டின் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்படும் பேனர்கள், ஒட்டப்படும் போஸ்டர்களை சிலர் கிழித்து வருவதை அறிந்தேன். நான் வைக்கும் பேனர்களை மட்டும் சிலர் அப்புறப்படுத்திவிடுகிறார்கள், அதே நேரத்தில் ஆம் ஆத்மி, நகராட்சி சார்பில் வைக்கப்படும் பேனர்கள் மீது யாரும் கை வைப்பதே கிடையாது.

Also read: ஒடிசாவில் பாஜகவுடன் கரம் கோர்த்த காங்கிரஸ்: காரணம் இது தான்!

இந்நிலையில் சம்பவத்தன்று நான்கு பேர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நான் வைத்த பேனர்களை அப்புறப்படுத்துவதை பார்த்தேன். ஏன் காங்கிரஸ் கட்சியின் பேனர்களை மட்டும் அப்புறப்படுத்துகிறீர்கள், ஆம் ஆத்மியின் பேனர்களை தொடுவதே இல்லையே என கேட்டேன். அவர்கள் நால்வரும் பதில் ஏதும் கூறவில்லை. எனவே அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்து தான் அப்படி செய்தேன். அவர்கள் நகராட்சி ஊழியர்கள் என எனக்கு தெரியாது. டெல்லி மாநகராட்சியில் இருந்து யாரும் இதுவரை என்னை தொடர்புகொள்ளவில்லை” என தெரிவித்தார்.

மாநகராட்சி ஊழியர்கள் தாக்குதலுக்கு ஆளான நிகழ்வை உறுதிப்படுத்திய சீனியர் மாநகராட்சி அதிகாரி ஒருவர், சம்பந்தப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டத்துறையினரின் ஆலோசனையை பெற்று அதன்படி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

First published:

Tags: Trending, Viral, Viral Video