#BREAKING | டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்‌ஷித் காலமானார்

ஷீலா தீக்‌ஷித்

ஆயுள் முழுவதும் காங்கிரஸ் உறுப்பினராகவே இருந்தார். மூன்று முறை, டெல்லியின் முதல்வராக இருந்தஅவர், டெல்லியின் முகத்தை மாற்றியமைத்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்‌ஷித் (81) இன்று திடீரென காலமானார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஷீலா தீக்சித், 1938-ம் வருடம் பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் பிறந்தார். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் இணையமைச்சராக இருந்த, ஷீலா தீக்சித் 1998-ம் ஆண்டு டெல்லி மாநில முதல்வரானார்.

    தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று 1998-2003 வரை 15 ஆண்டுகள் டெல்லியில் முதல்வராக நீடித்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டுத தோல்வியடைந்தார். உடல்நலக் குறைபாடு காரணமாக, இன்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் 3.30 மணி அளவில் உயிரிழந்தார்.



    அவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் இரங்கல் செய்தியில், ‘ஷீலா தீக்சித்தின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆயுள் முழுவதும் காங்கிரஸ் உறுப்பினராகவே இருந்தார். மூன்று முறை, டெல்லியின் முதல்வராக இருந்தஅவர், டெல்லியின் முகத்தை மாற்றியமைத்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.



    ஷீலா தீக்சித்தின் மறைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Sankar
    First published: