முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்

நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா? கோடிக்கணக்கான நாள் வேலை பார்ப்பவர்கள், சுய வேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே - சரியான முடிவா?

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் பல லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரிடம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், டெல்லி, கொடைக்கானல், ஊட்டி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

  சொத்து விவரம்

  கொடைக்கானலில் உள்ள ரூ.25 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலமும்,
  ஊட்டியில் ரூ.3.75 கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மற்றொரு பங்களாவும், டெல்லி ஜோர்பா உள்ள ரூ.16 கோடி மதிப்புள்ள நிலமும் முடங்கப்பட்டுள்ளன. இதைபோன்று வெளிநாடுகளான லண்டனில் ரூ.8 கோடி மதிப்புள்ள சொத்துகளும், பார்சிலோனா மற்றும் ஸ்பெயினில் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

  இதேபோல இருவருக்கும் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ள ரூ.90 லட்சம் ரொக்கமும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சொத்துகள் அனைத்தும் ஐ.என்.எக்ஸ் மீடியோ முறைகேடு மூலமாக வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  Published by:SPDakshina Murthy
  First published: