• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நடைபாதையில் வசித்து வரும் மேற்குவங்க முன்னாள் முதல்வரின் நெருங்கிய உறவினர்!

நடைபாதையில் வசித்து வரும் மேற்குவங்க முன்னாள் முதல்வரின் நெருங்கிய உறவினர்!

Buddhadeb Bhattacharya

Buddhadeb Bhattacharya

1976ம் ஆண்டு உயிரியல் ஆசிரியையாக பணியில் சேர்த்து 30 ஆண்டுகாலம் பணியாற்றி கடந்த 2009ம் ஓய்வு பெற்றிருக்கிறார் இரா பாசு.

  • Share this:
மேற்குவங்க முதல்வராக 2000 முதல் 2011ம் ஆண்டு வரை இருந்தவர் புத்ததேப் பட்டாச்சார்யா, இவருடைய நெருங்கிய உறவினரான ஒய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் கொல்கத்தாவின் தெருக்களில், நடைபாதையில் வசித்து வருவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யா, இவருடைய மனைவி மீரா பட்டாச்சார்யாவின் சகோதரி இரா பாசு (வயது 70) கொல்கத்தாவின் டன்லப் பகுதியின் நடைபாதையில் வசித்து வந்துள்ளார். இவர் அரசுப் பள்ளியில் உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த வியாழன்று மேற்குவங்க முன்னாள் முதல்வரான புத்ததேப் பட்டாச்சார்யாவின் நெருங்கிய உறவினரான இரா பாசு தெருவில் வசித்து வரும் தகவல் கர்தா நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரியவந்தது. பின்னர் அவரை லும்பினி பார்க் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என கூறினர்.

மேலும் மருத்துவமனை அதிகாரிகளிடம் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் அவர் குணமடைவார் எனவும் அவர் கூறினார்.

Also Read: புயலைக் கிளப்பிய பாதிரியாரின் ‘லவ் ஜிகாத்’ பேச்சு!

பிரியநாத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1976ம் ஆண்டு உயிரியல் ஆசிரியையாக பணியில் சேர்த்து 30 ஆண்டுகாலம் பணியாற்றி கடந்த 2009ம் ஓய்வு பெற்றிருக்கிறார் இரா பாசு. இவர் பென்ஷன் கிடைக்க தகுதி பெற்றிருந்தும் கல்வி சான்றிதழ்களை சம்ர்ப்பிக்காததால் அவர் பென்ஷன் பெறாமல் இருந்துள்ளார். மேலும் இரா, நடைபாதையில் வசித்துவந்த போதிலும் யாரிடமும் பிச்சை எடுத்ததில்லை என்றும் உணவு கூட காசு கொடுத்து தான் வாங்குவார் எனவும் சில நேரங்களில் பகுதிவாசிகளிடம் சகஜமாக பேசுவார் என்றும் அங்குள்ளவர்கள் கூறினார்கள். ஆசிரியையாக இருந்த போதிலும் தான் ஒரு விளையாட்டு வீராங்கனை என்றும் மாநில அளவில் பதக்கங்கள் வாங்கியிருப்பதாகவும் அவர் கூறியதாக அப்பகுதியினர் கூறினர்.

இரா திருமணம் ஆனவரா என தகவல் தெரியவில்லை. இரா ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை ஒருவர் இராவை தனது வீட்டில் தங்க வைத்திருக்கிறார். பின்னர் தலைமை ஆசிரியை மரணம் அடைந்த பின்னர் இரா தெருக்களில் வசிக்க வந்ததாக கூறியுள்ளார்.

Also Read: செக்ஸ் வீடியோ காட்டி 4ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த தலைமை ஆசிரியர்!

இரா பாசு நடைபாதையில் வசித்து வந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இரா பணியாற்றிய பள்ளியிடமிருந்து கல்வி ஆவணங்களை கேட்டுள்ளனர், அது கிடைத்த பின்னர் இராவுக்கு பென்ஷன் வழங்கப்படும் எனவும் கூறினர்.

புத்ததேப் பட்டாச்சார்யா இரா பாசுவின் நிலை குறித்து இதுவரை விளக்கம் கூறாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான மனஷ் முகர்ஜி கூறுகையில் தனக்கு இரா குறித்தும் அவரின் நிலை குறித்தும் தெரியும், ஆனால் அவருக்கு உதவ முயன்ற போது அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: